ETV Bharat / state

ரூ.40.58 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவமனை, அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்த ஓபிஎஸ் - rs 40.58 lakhs worth Veterinary Hospital

தேனி: 40.58 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்நடை மருத்துவமனை, அங்கன்வாடி மைய கட்டடம், அம்மா மினி கிளினிக் ஆகியவற்றை துணை முதலமைச்சர் திறந்துவைத்தார்.

Anganwadi Centre Opened in theni
ஓபிஎஸ்
author img

By

Published : Jan 30, 2021, 10:11 PM IST

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் தேனி மாவட்டத்தில் இதுவரை 25 அம்மா மினி கிளினிக்குகள், 4 நடமாடும் அம்மா மினி கிளினிக்குகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 3 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்துவைத்தார்.

முதலாவதாக பெரியகுளம் அருகே உள்ள ஜி. கல்லுப்பட்டி, குள்ளப்புரம், சருத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் திறந்துவைத்து கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு கால ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். குள்ளப்புரம் பகுதியில் 9.08 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், வடபுதுப்பட்டி- அம்மாபட்டியில் 31.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனைக் கட்டடங்கள் என 40.58 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

கால்நடை மருத்துவமனை, அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்த ஓபிஎஸ்

இந்நிகழ்வுகளில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் உள்பட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:வரும் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.