ETV Bharat / state

'பதிவுசெய்யப்படாத மனநல சிகிச்சை மையங்கள் செயல்படக் கூடாது' - ஓய்வுபெற்ற நீதிபதி

பதிவுசெய்யப்படாத மனநல சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டால் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தேனி, திண்டுக்கல் மாவட்ட மனநல மறுசீராய்வு மன்றத் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுந்தரகுமார் தெரிவித்துள்ளார்.

'பதிவு செய்யப்படாத மனநல சிகிச்சை மையங்கள் செயல்படக்கூடாது' - ஓய்வு பெற்ற நீதிபதி
author img

By

Published : Dec 2, 2020, 6:37 PM IST

Updated : Dec 2, 2020, 8:45 PM IST

தமிழ்நாட்டில் 13 இடங்களில் மனநல மறுசீராய்வு மன்றம் கடந்த நவம்பர் 1ஆம் தேதிமுதல் செயல்படத் தொடங்கியது. அதன்படி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மாவட்ட மனநல மன்றம் ஆரம்பிக்கப்பட்து. இதன் தலைவராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார் உள்ளார். உறுப்பினர்களாக மனநல மருத்துவர் ரமேஷ் பூபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா, வழக்கறிஞர்கள் முத்துசாமி, செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் இன்று தேனி பழைய அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுந்தர குமார், "மறுசீராய்வு மன்றத்தின் முக்கிய நோக்கம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் குறித்து உரிய ஆய்வுசெய்து நடவடிக்கை எடுப்பது. எந்தவொரு மனநல நோயாளிக்கும் நீண்டகால சிகிச்சை அளிக்கக் கூடாது. தேவைப்படும் நேரத்தில் மட்டுமே சிகிச்சையளிக்க வேண்டும்.

தேவையின்றி அளவுக்கு அதிகமான மருந்துகள் வழக்கப்படுவதாக பாதிக்கப்படுபவர்களின் உறவினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களால் அளிக்கப்படும் புகார் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சையில் இருக்கும் மனநல நோயாளிகளைச் சங்கிலியால் கட்டுதல், அவர்களது விருப்பமின்றி மொட்டை அடித்தல் போன்ற துன்புறுத்தல்களைச் செய்யக் கூடாது. மனநலம் பாதித்தவர்களையும் மனதர்களாகப் பார்க்க வேண்டும், விலங்குகள் போன்று நடத்தக் கூடாது. அவ்வாறு செயல்படும் மையங்களைக் கண்டறிந்து இக்குழு நடவடிக்கை எடுக்கும்.

மேலும், மனநலம் பாதிப்படைந்தவர்களுக்கும் சட்ட உரிமைகள் கிடைக்கும் வகையில், இலவச சட்ட உதவிகளையும் இந்த மன்றம் செய்து தரும். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பதிவுசெய்யப்படாத மனநல மருத்துவமனை, மையங்கள் இயங்கிவருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

பதிவுசெய்யாத மையங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அந்த மையங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும், அங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அதோடு, சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படும். இதுதவிர சிறைக் கைதிகளிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை அரசு மருத்துவமனையிலோ, சிறையில் மனநல மருத்துவப் பிரிவிலோ வைக்க வேண்டும்.

மேலும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மனநலம் பாதிப்படைந்தவர்கள் குறித்த புகார்களை 9894453929 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்ட ஈரோடு பெண்!

Last Updated : Dec 2, 2020, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.