தேனி: அடுத்து உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் மாவட்ட தனிப்பிரிவில் தலைமைக் காவலராக சாந்தகுமார் பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் அய்யம்மாள். வயது-70. தனியாக வசித்து வந்த அவர் கணவர் அருணாச்சலம் கடந்த வருடம் இயற்கை மரணம் அடைந்ததைத்தொடர்ந்து, அவரின் நினைவால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்,அய்யம்மாள்.
மேலும் சர்க்கரை நோய் தாக்கப்பட்டு உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டு மனவிரக்தியில் தனியாக வாழ்ந்து வந்த அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணவில்லை. தகவல் அறிந்த மகன் சாந்தகுமார் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து போலீசார் அவரைத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றுப் பகுதியில் நெல் நடவுப் பணிக்குச்சென்றவர்கள் ஆற்றுப்பகுதியில் அழுகிய நிலையில் பிணம் கிடப்பதைக்கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அய்யம்மாள் என்பது தெரிய வந்தது. கணவர் இறந்த துக்கம் மற்றும் உடல் நோய் தாக்கத்தால் அய்யம்மாள் மனவருத்தத்தில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என வழக்குப்பதிவு செய்து அவர் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த வழக்கு குறித்து உத்தமபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்: உயிரிழப்பதற்கு முன்பு பள்ளி வகுப்பில் பங்கேற்ற காட்சி!