ETV Bharat / state

குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய உதயநிதி!

தேனி: கிரிக்கெட் விளையாடுவதற்கு பேட் வேண்டும் எனக் கடிதம் வழங்கிய சிறுவர்களின் ஆசையை உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றினார்.

udhayanidhi stalin
udhayanidhi stalin
author img

By

Published : Feb 10, 2021, 12:09 PM IST

தேனி மாவட்டத்திற்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் தேர்தல் பரப்புரைக்காக வருகைபுரிந்தார். அவர் ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். ஆண்டிபட்டியில் முதல் பரப்புரையைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் அடுத்து மொட்டனூத்து ஊராட்சியில் திறந்தவெளி வேனில் பேசினார்.‌

பேசி முடித்துவிட்டு காரில் ஏறி கிளம்பிய உதயநிதி ஸ்டாலினிடம் சாலையின் ஓரத்தில் நின்று குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவர்கள் கடிதம் ஒன்றை கொடுத்தனர்.

அதில், கன்னியப்பிள்ளைபட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்களுக்கு கிரிக்கெட் விளையாட பேட் வேண்டும் எனச் சிறுவர்கள் எழுதியிருந்தனர். அதனை ஏற்ற உதயநிதி ஸ்டாலின் உடனே நிறைவேற்றுவதாக சிறுவர்களிடம் உறுதியளித்துச் சென்றார். மதிய உணவிற்காக சின்னமனூரில் உள்ள தனியார் விடுதியில் உதயநிதி தங்கினார். மாலையில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவிருந்தார்.

udhayanidhi stalin
சிறுவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்

மனம் கவர்ந்த உதயநிதி

அதற்கு முன்பாக கடிதம் கொடுத்த சிறுவர்களை வரவழைத்து அனைவருக்கும் தலா ஒரு கிரிக்கெட் பேட், பந்து வழங்கினார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட சிறுவர்கள் பேட்டில் ஆட்டோகிராஃப் இடுமாறு உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டனர்.

கிரிக்கெட் பேட் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்

சிறுவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் பேட்டில் தனது ஆட்டோகிராஃபை போட்டு பரிசளித்து அவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வு அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.