ETV Bharat / state

கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

தேனி: பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனமும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி நேற்று (நவ.4) விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார், இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

ஒருவர் உயிரிழப்பு
ஒருவர் உயிரிழப்பு
author img

By

Published : Nov 5, 2020, 10:22 AM IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தர்மலிங்காபுரம் சாலையில், எதிர்த்திசையில் தேனியிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தின் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி நேற்று (நவ.4) விபத்துக்குள்ளாகியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஆண்டனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த ரங்கசாமி, அறிவழகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தற்போது, உயிருக்கு ஆபத்தானநிலையில் இருவரையும் மீட்ட காவல் துறையினர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இவர்கள் நேரு நகரைச் சேர்ந்த ஆண்டனி(18), ரங்கசாமி(19), அறிவழகன்(18) எனக் கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல் துறையினர் அரசுப் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன்(47) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ”திமுக சொல்லி கேட்க விரும்பாமல் கருத்துக்கேட்பு நாடகம் நடத்தும் அரசு” - ஸ்டாலின் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.