ETV Bharat / state

பெரியகுளம் அருகே இரு சமூகத்தினர் மோதல் - 7 பேருக்கு வெட்டு, இருவர் பலி!

தேனி: பெரியகுளம் அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்
இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்
author img

By

Published : Jan 28, 2020, 10:13 AM IST

Updated : Jan 28, 2020, 10:44 AM IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி கிராமத்தில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சா விற்று வருவதாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் கஞ்சா விற்பனையாளர்களுக்குத் தெரிய வரவே, புகார் கொடுத்த எதிர் சமூகத்தினரின் வீட்டை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்

இச்சம்பவம் தொடர்பாக சேதப்படுத்தப்பட்ட வீட்டைக்கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட வீட்டைக்கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தை சில நாட்களுக்கு முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே அப்பகுதியில் அவ்வப்போது மோதல் இருந்து வந்ததுள்ளது. இந்நிலையில், நேற்று கைலாசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் பெரியகுளம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

அங்கு, இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாகவும் காவல்துறையினர் தலையிட்டு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால், காவல் துறையினர் இதை பெரிதாக எண்ணாமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கம்பி, அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 7 பேர் வெட்டு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை

இதில் பலத்த காயமடைந்த ஜெயபால் என்பவர் உயர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெருமாள் (70), மோதல் காரணமாக பலியானதாகக் கூறி தேனி - திண்டுக்கல் சாலையில் இறந்தவரின் உடலை வைத்து, அவரின் உயிரிழப்பிற்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள் தொடர்ந்து இரண்டு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

மேலும், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்க, மாவட்ட கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, பெரியகுளம், தேனி, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல், தொடர்பாக நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழந்நிலை நிலவி வருகிறது.

குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல் துறை

இதையும் படிங்க: சுவர் விளம்பர விவகாரம்: திமுக - அதிமுகவினர் இடையே மோதல்

Intro: காவல்துறை அஜாக்கிரதையால் பெரியகுளம் அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலி 4 பேருக்கு அரிவாள் வெட்டு. ஒரு சமூகத்தைச் சேர்ந்த உறவினர்கள் இறந்தவரின் உடலை சாலையில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. பதற்றம் போலீஸ் குவிப்பு.
Body:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கைலாசபட்டி கிராமம். இப்பகுதியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சா விற்று வருவதை பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மற்றொரு சமூகத்தினர் புகார் கொடுத்தனர். இந்நிலையில் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் கஞ்சா விற்பனையாளர்களுக்கு தெரியவரவே புகார் கொடுத்த மாற்று சமூகத்தினரின் வீட்டை அடித்து நொறுக்கி பிரச்சனை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களி மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தை சில நாட்களுக்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே அப்பகுதியில் அவ்வபோது மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலையில் கைலாசபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாகவும் காவல்துறையினர் தலையிட்டு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் காவல்துறையினர் இதை பெரிதாக எண்ணாமல் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் சாதாரணமாக விட்டுவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாலை இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கம்பி, அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட பொருட்களால் ஒருவரை ஒருவர் தாக்கியக் கொண்டனர். இதில் ஒரே சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட 7 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயபால் என்பவர் உயர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதற்கிடையே மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 70 வயது பெருமாள் என்ற முதியவர் மோதல் காரணமாக பலியானதாக கூறி தேனி - திண்டுக்கல் சாலையில் இறந்தவரின் உடலை போட்டு முதியவரின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி தொடர்ந்து 2 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் தேனி திண்டுக்கல் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டமல் இருக்க மாவட்ட கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் பெரியகுளம், தேனி, காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு பிரிவினரிடையே மோதல் நடைபெறாமல் இருக்க பாதுகாப்படு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவீதம் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழந்நிலைய நிலவி வருகிறது.
Conclusion: கஞ்சா விற்பனை தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை, மோதல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் அஜாக்கிரதையாக இருந்ததாலே இரு சமூகத்தினரும் அரிவாள் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதியது மட்டுமல்லாமல் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Last Updated : Jan 28, 2020, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.