தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தம்பதியினர் வாசகர் - அமுதா. இவர்கள் இன்று இருசக்கர வாகனத்தில், உத்தமபாளையத்திலுள்ள தங்களது உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு, மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது அய்யனார்கோவில் அருகில் வந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக, அவ்வழியே வந்த தக்காளி லாரி இருசக்கரவாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த தம்பதி இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்தவர்களின் உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய லாரி ஓட்டுநரை வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:தொழிலதிபரை கட்டிப்போட்டு ரூ.20 லட்சம் பணம், சொகுசு கார் கொள்ளை!