ETV Bharat / state

மூணாறு மலைச் சாலையில் மண்சரிவு: எல்லையில் போக்குவரத்து பாதிப்பு - தேனி மாவட்டம் போடி

தேனி: போடிமெட்டு-மூணார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆறாவது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

munnar-mountain-road
munnar-mountain-road
author img

By

Published : Dec 11, 2019, 3:28 PM IST

தேனி மாவட்டம் போடி அருகே போடி மெட்டு மலைச்சாலை உள்ளது. கொச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இவ்வழித்தடத்தில் மூணாறு, பூப்பாறை, நெடுங்கண்டம், ராஜாக்காடு உள்ளிட்ட கேரளாவின் முக்கிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் சென்று வருகின்றனர்.

போடி அருகே உள்ள முந்தல் பகுதியில் இருந்து 20 கி.மீ. தூரமுடைய இந்த மலைச்சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த சாலையை அகல படுத்துவதற்காக பாறைகளுக்கு வெடி வைத்து அகற்றப்பட்டதால் பாறைகள் ஆங்காங்கே பிளவு ஏற்பட்டு எந்த நேரத்திலும் நிலச் சரிவு ஏற்படும் வகையில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் போடிமெட்டு-மூணார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆறாவது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு காரணமாக சாலையில் மண் குவியலாக கிடக்கிறது. இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மூணாறு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

இதனால் கேரளாவில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகளும், விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

தற்போது ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் குவிந்துள்ள மண்ணை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மலைப்பாதையில் ஏற்படும் நிலச்சரிவை கட்டுப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Intro: மூணாறு மலைச் சாலையில் மண்சரிவு. தமிழக - கேரள போக்குவரத்து பாதிப்பு..

Body: தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது போடி மெட்டு மலைச்சாலை. கொச்சின் - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இவ்வழித்தடத்தில் மூணாறு, பூப்பாறை, நெடுங்கண்டம், ராஜாக்காடு உள்ளிட்ட கேரளாவின் முக்கிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் சென்று வருகின்றனர். போடி அருகே உள்ள முந்தல் பகுதியில் இருந்து 20கி.மீ தூரமுடைய இந்த மலைச்சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த சாலையை அகல படுத்துவதற்காக பாறைகளுக்கு வெடி வைத்து அகற்றப்பட்டதால் பாறைகள் ஆங்காங்கே பிளவு ஏற்பட்டு எந்த நேரத்திலும் நிலச் சரிவு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த சூழலில் போடிமெட்டு மூணார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆறாவது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சாலைகளில் மண் குவியலாக கிடக்கிறது. இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் பல மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேரளாவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளும், விவசாயிகளும், தொழிலாளர்களின் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
தற்போது ஜேசிபி இயந்திரம் மூலம் நிலச் சரிவை ஏற்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Conclusion: தொடர்ந்து மலைப்பாதையில் ஏற்படும் நிலச்சரிவை கட்டுப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.