ETV Bharat / state

வனப்பகுதியில் புலி உயிரிழப்பு! விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை

தேனி: மேகமலை வன உயிரினப்பகுதியில் உயிரிழந்த புலி தேசிய புலிகள் காப்பக விதிகளின் நெறிமுறைப்படி உடற்கூறாய்வு செய்யப்பட்டு எரிக்கப்பட்டது.

புலி உயிரிழப்பு
author img

By

Published : Apr 7, 2019, 8:13 AM IST

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப்பகுதியில் வனத் துறை பணியாளர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிழ்நாடு-கேரளா எல்லைப்பகுதியில் அப்பர் மணலாறு என்ற இடத்தில் புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து வனத் துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, புலியின் உடலை தேசிய புலிகள் காப்பக விதிகளின் நெறிமுறைப்படி உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

மதுரை முதன்மை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு, மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லே, தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்ட வனத் துறை அலுவலர்கள் முன்னிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவ அலுவலர் அசோகன், கோம்பைத்தொழு கால்நடை அறுவைச் சிகிச்சை உதவியாளர்கள் கலைவாணன் மற்றும் வைலன் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் இறந்த புலியின் உடலை உடற்கூறாய்வு செய்தனர்.

மேலும் வனத் துறை உயர் அலுவலகர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து வனத் துறை அலுவலர்கள் தெரிவிக்கையில், உயிரிழந்தது 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி என்றும், புலிகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையால் உயிரிழந்திருக்கலாம் எனவும், புலியின் நரம்புகள், நகங்கள் மற்றும் தோல் ஆகியவற்றின் தன்மையின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாகக் கூறினர்.

உடற்கூறாய்வுக்குப் பின்னர் புலியின் உடல் அங்கேயே எரிக்கப்பட்டது. மேகமலை வனப்பகுதியில் இதுவரை யானைகள் மட்டுமே இறந்து வந்த நிலையில் தற்போது புலி உயிரிழந்துள்ளது விலங்குகள் நல ஆர்வலர்களை கவலையடைய வைத்துள்ளது.

சுப.பழனிக்குமார் - தேனி.           06.04.2019.

மேகமலை வன உயிரினப்பகுதியில் புலி உயிரிழப்பு. வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு.

                தமிழககேரள எல்லைப்பகுதியில் நேற்று முன்தினம் கேரள வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக பகுதியின் வழியாக துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அவர்கள் தமிழக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.          அதன்படி தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப்பகுதியில் வனத்துறை பணியாளர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழக  - கேரளா எல்லைப்பகுதியில் அப்பர் மணலாறு என்ற இடத்தில்  புலி ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, புலியின் உடலை தேசிய புலிகள் காப்பக விதிகளின் நெறிமுறைப்படி இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மதுரை முதன்மை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு, மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லே, தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவ அலுவலர் அசோகன், கோம்பைதொழு கால்நடை அறுவைச் சிகிச்சை உதவியாளர்கள் கலைவாணன் மற்றும் வைலன் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் இறந்த புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

மேலும் வனத்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், உயிரிழந்தது 10வயது மதிக்கத்தக்க ஆண் புலி என்றும்புலிகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையால் உயிரிழந்திருக்கலாம் என, புலியின் நரம்புகள், நகங்கள் மற்றும் தோல் ஆகியவற்றின் தன்மையின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாகக் கூறினர். பிரேத பரிசோதணைக்குப் பின்னர் புலியின் உடல் அங்கேயே எரிக்கப்பட்டன.

மேகமலை வனப்பகுதியில் இதுவரை யானைகள் மட்டுமே இறந்து வந்த நிலையில் தற்போது புலி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Visuals sent FTP.

File Name As:

1)      TN_TNI_04_06_TIGER DEATH @ MEGAMALAI RANGE AREA_VIS_7204333

2)      TN_TNI_04a_06_TIGER DEATH @ MEGAMALAI RANGE AREA_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.