தேனி மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலம், சாலைகள் மற்றும் ரயில்வே புறம்போக்கு நிலம் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வரும் நபர்களுக்குப் புதிய குடியிருப்புகள் கட்டித் தருவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் 2 ஆயிரத்து 925 நபர்கள் கண்டறியப்பட்டு, தலா ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி, தப்புக்குண்டு, கோம்பை ஆகிய மூன்று பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.122 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 46 அடுக்கு மாடிகள் கொண்ட 1,224 குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டது.
இவற்றில் மேற்குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் 14 அடுக்குமாடிகளில் 378 குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 20) வடவீரநாயக்கன்பட்டி, தப்புக்குண்டு ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்புகளின் திட்ட விவரங்கள், மதிப்பீடு உள்ளிட்டவற்றை துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்டறிந்தார். மேலும் கட்டிமுடிக்கப்பட்ட குடியிருப்புகளில் உள்ளே சென்று ஆய்வு செய்தார்.
தேனியில் புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புகளை ஆய்வுசெய்த ஓபிஎஸ்! - தமிழ்நாடு துணை முதலமைச்சர்
தேனி: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.