ETV Bharat / state

தேனியில் 3 நவீன போக்குவரத்து சிக்னல் திறப்பு - தேனி மாவட்ட செய்திகள்

தேனி: புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூன்று நவீன போக்குவரத்து சிக்னலை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி திறந்து வைத்தார்.

மூன்று நவீன போக்குவரத்து சிக்னல் திறப்பு

author img

By

Published : Oct 22, 2020, 2:24 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் அன்னஞ்சி விலக்கு, மதுரை பைபாஸ் ரோடு, பழைய பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் புதிய சிக்னல் பொருத்தப்பட்டுள்ளன. இதனை இன்று (அக்.22) சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய சிக்னல் பயன்பாட்டிற்கு வந்தன.

பின்னர், அவர் பொதுமக்களுக்கு முகக்கவசம், கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி தெரிவித்ததாவது, "சென்னைக்கு அடுத்தப்படியாக போக்குவரத்து சிக்னல் கம்பங்களில் ஒளிரும் தன்மையுடைய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: திருப்பெரும்புதூரில் ட்ராபிக் சிக்னல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.