தேனி மாவட்டம், சமதர்மபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் - குருவம்மாள் தம்பதியினரின் மகன் மாதேஷ் (19). மூன்றாம் ஆண்டு பாலிடெக்னிக் படித்துவந்த இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
தேனி அரசினர் தொழிற்பயிற்சி மையம் அருகே உள்ள கிணற்றின் படியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தவர், எதிர்பாராத விதமாக நீரில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் மாதேஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியோடு கிணற்றிலிருந்த மாதேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இது தொடர்பாக தேனி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஏழைகளுக்கு உணவளிக்க ரூ.20 லட்சம் திரட்டிய இந்திய மகளிர் ஹாக்கி அணி!