மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெற்றி சினிமாஸ் என்ற பெயரில் திரையரங்குகள் உள்ளன. இவற்றில் தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டியில் உள்ள வெற்றி சினிமாஸ் திரையரங்கில் வருமான வரித் துறையினர் இன்று (மார்ச் 3) திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வெற்றிவேல், வருமான வரி கணக்குகளை சரிவர தாக்கல் செய்யாமல் இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை முடிவில் கணக்கில் காட்டப்படாத பணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர், உசிலம்பட்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனின் சகோதரர் ஆவார். மகேந்திரன் தற்போது அதிமுகவிலிருந்து விலகி அமமுக மாநில அமைப்பு செயலாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
100 விழுக்காடு வாக்களிக்க ஆட்சியர் செய்த வேலை! - தகவல் உள்ளே...