குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள் அமைப்பினர் எனப் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்பினர் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்று முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியகுளம் வடகரைப் பகுதியில் உள்ள ரஹ்மத் மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பாக சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும், டெல்லியில் உள்ள ஜாமியாப் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று சவப்பெட்டியை வைத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்தத் தொடர் தர்ணா போராட்டத்தில் பெரியகுளம் பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்' - ஸ்டாலின் விமர்சனம்