தேனி மாவட்டம் டொம்புச்சேரி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனத்துடன் பின் சென்ற அதிவிரைவுப் படை வாகனம் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அதிவிரைவுப் படை வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து வீரபாண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர் தேவாரம் அருகே உள்ள டி.ஓவலாபுரத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் ஜீவானந்தம் என்பது தெரியவந்துள்ளது.