தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான டம்டம் பாறை வனப்பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வருடந்தோறும் கோடைகாலங்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம்.
ஆனால், இவ்வாண்டு ஜனவரி மாதமே காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. மேலும், தற்போது குளிர்காலம் என்பதால் வழக்கத்தை விடப் பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், தற்போது பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பல அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன.
மேலும், காட்டுத் தீ வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காடு வளர்ப்பு - மனித குலத்தின் வருங்காலத்துக்கு ஓர் உறுதியான காப்பு