தீவிரமாக பரவிவரும் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானமின்றி பலர் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் உதவி செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் வருமானமின்றி தவித்துவரும் பல்வேறு வகையான தொழிலாளர்களுக்கு தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார் தனது சொந்த நிதிலிருந்து ரூ.17 லட்சம் வழங்கினார்.
இதில், சாலையோர வியாபாரிகள், மண் பாண்டம் செய்வோர், மெத்தை தயாரிப்பு தொழிலாளர்கள், கொத்தனார்கள், புகைப்பட கலைஞர்கள், தியேட்டர் ஆபரேட்டர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், பெயிண்டர்கள், பந்தல்காரர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், ஒலிபெருக்கி சங்கத்தினர், பொற்கொல்லர்கள், உறுமிக்காரர்கள், அச்சக தொழிலாளர்கள், மினி டெம்போ ஓட்டுனர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், பெரியகுளம் நகர மற்றும் வைகை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நகர தையல் தொழிலாளர்கள், தென்னிந்திய சமையல் கலைஞர்கள் மற்றும் கிராமிய கரகாட்ட கலைக் குழுவினர் என ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூபாய் 1000 வீதம் 17 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கினார்.
இதையும் பார்க்க: சென்னை மாநகரில் உள்ள பள்ளியில் கரோனா மையம் - ஆட்சியர் உத்தரவு