ETV Bharat / state

அண்ணன் தங்கை உறவு என்பதால் எதிர்ப்பு; உயிரிழந்த காதலி.. உதவிக் கேட்ட காதலன்! - விஷம் அருந்திய காதலர்கள்

அண்ணன் தங்கை உறவு என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் இருவரும் விஷம் அருந்தினர்.

அண்ணன் தங்கை உறவு என எதிர்த்த பெற்றோர்கள்! விஷம் அருந்திய காதலர்கள்!

author img

By

Published : Apr 17, 2022, 1:15 PM IST

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாப்புளி தெருவை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை உறவு என்பதால் இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (ஏப்.16) இரவு இருவரும் வீட்டை விட்டு கிளம்பி தேவதானப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி பின்புறம் உள்ள பகுதியில் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முடிவு செய்து விஷம் அருந்தியுள்ளனர்.

அதில் கல்லூரி மாணவி உயிர் இழந்த நிலையில் இளைஞர் எழுந்து அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டு உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் தேவதானப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த காவல் துறையினர் உயிருக்கு போராடிய இளைஞரை பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் உயிரிழந்த கல்லூரி மாணவியின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி இறந்த மாணவியின் உடலை உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து பல்வேறு கோணங்களில் தேவதானப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:3 பெண்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- திடுக் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.