தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலும், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளதால் தண்ணீர் குளிர்ச்சியாகவும் மூலிகைத்தன்மை வாய்ந்தது எனவும் கூறப்படுகிறது. இதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு படையெடுக்கத் தொடங்கினர். கடந்த சில மாதங்களாகப் பெய்துவந்த தொடர்மழையால், அருவியின் நீர்வரத்து சீராக இருப்பதால் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஆரவாரத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: ’நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ‘தர்பார்’ ஓடும் திரையரங்குகள் முன்பு போராட்டம்’