ETV Bharat / state

ஓய்வூதியம் வழங்கக்கோரி தேனியில் அரசு பேருந்து ஓட்டுநர் தர்ணா போராட்டம்!

தனக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம், வைப்பு மற்றம் சேம நல நிதிகளை வழங்கிடுமாறு தேனியில் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரசு பேருந்து ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம்

author img

By

Published : Dec 9, 2020, 5:02 PM IST

தேனி: தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட ராஜகளம் பகுதியில் வசித்து வருபவர் வடிவேல்(58).

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தேனி கிளையில் கடந்த 28 ஆண்டுகளாக ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெறவிருந்தார்.

ஆனால் கரோனா பரவலால் அரசு ஊழியர்களின் பணி ஓய்வை ஓராண்டு நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனால் அவர் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறவுள்ளார்.

இந்நிலையில் உடல் நிலை காரணமாக தன்னால் ஓராண்டு கூடுதல் பணி செய்ய இயலாது என வடிவேல் விருப்ப ஓய்வு கோரியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த போக்குவரத்து நிர்வாகம் அவருக்கு வழங்க வேண்டிய வைப்பு நிதி, சேமநல நிதி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக கூறி இன்று தேனி போக்குவரத்து பணிமணை முன்பாக தரையில் படுத்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

அரசு பேருந்து ஓட்டுநர் தர்ணா போராட்டம்

தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் வடிவேலுவை சமாதானம் செய்து போக்குவரத்து நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரிடம் கிளை மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் பேசிய வடிவேலு, "தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் ஓட்டுநராக 28 ஆண்டுகளுக்கு மேலாக இரவு - பகலாக பணிபுரிந்துள்ளேன். தற்போது 58 வயதில் பணி ஓய்வு பெறும் நிலையில் அரசு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்துள்ளது.

ஆனால் ஆஸ்துமா மற்றும் வயோதிக பிரச்னைகளால் தன்னால் பணியில் நீடிக்க இயலாத சூழ்நிலையில் உள்ளேன். எனவே எனது விருப்ப ஓய்வை போக்குவரத்து நிர்வாகத்திற்கு பலமுறை அனுப்பியும் ஏற்கவில்லை.

இதையடுத்து முதலமைச்சருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து விருப்ப ஓய்வை போக்குவரத்து நிர்வாகம் ஏற்றது. ஆனால் ஓய்வூதியம், வைப்பு மற்றும் சேமநல நிதி ஆகியவற்றை வழங்காமல் போதிய நிதி இல்லை எனக் கூறி இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.

இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது மருத்துவ சிகிச்சைக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்க வேண்டிய நிதியை வழங்கிட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை: சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.