ETV Bharat / state

தேனியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் - தமிழ் புலிகள் நிர்வாகி கைது - தேனியில் தமிழ்ப்புலிகள் அமைப்பு நிர்வாகியிடம் விசாரணை

தேனி: போடியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வழக்கில் தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தேனியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்
தேனியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்
author img

By

Published : Dec 26, 2019, 8:38 PM IST

தேனி மாவட்டம் போடியில் நேற்று முன்தினம் 500 ரூபாய் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற கேரளாவைச் சேர்ந்த டாய் ஜோஸ்(21) என்பவரை க்யூ பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, போடி நகர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. தற்போது டாய் ஜோஸ் அளித்த வாக்குமூலத்தின்படி தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவரை க்யூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்

இவர் தமிழ் புலிகள் அமைப்பின் கோம்பை பேரூர் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் மேலும் சிலர் சிக்குவார்கள் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அறிவித்தபடி புதுச்சேரியில் போராட்டம் நடக்கும் - நாம் தமிழர் கட்சி

Intro: தேனி மாவட்டத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது.
பிடிபட்ட கேரள வாலிபரின் வாக்குமூலத்தின்படி தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்த கோம்பை நிர்வாகி கைது. காவல்துறையினர் விசாரணை.
Body: தேனி மாவட்டம் போடியில் நேற்று முன்தினம் 500 ரூபாய் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற கேரள வாலிபரை க்யூ பிரிவு காவல்;துறையினர் கைது செய்தனர். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகிலுள்ள உடும்பஞ்சோலையை சேர்நத சுதர்சன் மகன் டாய் ஜோஸ்(21) என்பவர் போடி பேருந்துநிலையத்தில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற போது கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்த 106 ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக போடி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது, எங்கு அச்சடிக்கப்படுகிறது என்று தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில், டாய் ஜோஸ் அளித்த வாக்குமூலத்தின்படி மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதியை சேர்ந்த சண்முகராஜ் என்பவரை தற்போது க்யூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தமிழ்ப்புலிகள் அமைப்பின் கோம்பை பேரூர் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion: இந்த விசாரணையில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்டுகிறது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.