ETV Bharat / state

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவர் மீண்டும் மாயம்! - நித்தியானந்தா

தேனி: நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட தேனி மருத்துவர் மீண்டும் காணாமல் போனதால் காவல் துறையினர் அவரைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.

theni-doctor-rescued-form-nithyananda-ashram-is-got-again-missing
மருத்துவர்
author img

By

Published : Dec 13, 2019, 10:58 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருந்து ஆளுநரான காந்தியின் மகன் மனோஜ்குமார் (33).

மருத்துவரான மனோஜ்குமார் கடந்த 2018ஆம் ஆண்டு, மதுரை மாவட்டம் வெள்ளளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே ஆண்டு மனோஜ்குமார், அவரது அக்கா மகள் நிவேதாவுடன் திடீரென காணாமல் போனார்.

நித்தியானந்தாவால் ஈர்க்கப்பட்ட மனோஜ் குமார், அவரது அக்கா மகளுடன் திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மனோஜின் தந்தை காந்தி அங்கு சென்று விசாரித்ததில், அவர்கள் பெங்களூருவில் உள்ள பிடாடி ஆசிரமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பின் காந்தியும் அவரது மனைவியும் அந்த ஆசிரமத்திற்குச் சென்றனர்.

ஆனால், அங்கிருந்து நித்தியின் சீடர்கள் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டதால், காந்தி அவர் குடும்பத்தோடு அங்கு தர்ணா போராட்டம் மேற்கொண்டார்.

பின்னர் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் காந்தி, தனது மகன் மற்றும் பேத்தியை மீட்டுத் தரவேண்டும் எனப் புகார் அளித்தார். அதையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து பிடாடி ஆசிரமத்திற்குச் சென்று இருவரையும் மீட்டு வந்தனர்.

இந்நிலையில் மருத்துவர் மனோஜ்குமார், தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையே சமீபத்தில் மனோஜ் குமார் மீண்டும் காணாமல் போனார். இது குறித்து அவரது தந்தை காந்தி பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைலாயநாடு அமைத்துள்ளேன் என்று கூறிவரும் நித்தியானந்தா எந்த நாட்டில் இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாத நிலையில், தற்போது நித்தியானந்தாவிடம் இருந்து மீட்கப்பட்டு வந்த மருத்துவர், மீண்டும் நித்தியானந்தாவிடமே சென்று விட்டாரா? என்ன நேர்ந்தது! என்பது குறித்து எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவர் மீண்டும் மாயம்...

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வியிடம் கேட்ட போது, ' மருத்துவர் காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். தனிப்படை அமைப்பது குறித்து யோசித்து வருகிறோம் ' எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

'ஆண்டி முதல் அரசாட்சி வரை' - இது நித்தியின் தாண்டவம்!

முடக்கப்பட்ட நித்தியானந்தாவின் கடவுச்சீட்டு: புதிய விண்ணப்பமும் ரத்து!

'நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி அதில் முதல்வர் ஆகலாம்' - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்!

Intro: நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்க்பட்ட தேனி மருத்துவர் மீண்டும் மாயம்.! காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு.
Body: தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் காந்தி ஓய்வு பெற்ற மருந்து ஆளுநரான இவரது மகன் மனோஜ்குமார்(33). மருத்துவரான மனோஜ்குமார் கடந்த 2018 மதுரை மாவட்டம் வெள்ளளுரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார், அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு அவரது அக்கா மகள் நிவேதாவுடன் திடீரென மாயமானர். நித்யானந்தாவால் ஈர்க்கப்பட்ட மனோஜ்;குமார் அவரது அக்கா மகளுடன் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசர்மத்தில் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து காந்தி அங்கு சென்று விசாரித்ததில் பெங்களுரில் உள்ள பிடரி ஆசிரமத்தில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து காந்தி மற்றும் அவரது மனைவியும் பிடரி ஆசிரமத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு இருந்து நித்தியின் சீடர்கள் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர் இதனைத் தொடர்ந்து அங்கு தர்ணா போராட்டம் மேற்கொண்டனர்.
பின்னர் பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் காந்தி தனது மகன் மற்றும் பேத்தியை மீட்டுத் தரவேண்டும் என புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து பிடரி ஆசிரமத்திற்கு சென்று இருவரையும் மீட்டு வந்தனர்.
இந்நிலையில் மருத்துவர் மனோஜ்குமார் தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக மனோஜ்குமர் மீண்டும் மாயமானார். இது குறித்து அவரது தந்தை காந்தி பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் புகார் அளித்தன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைலாயநாடு அமைக்கப் போகிறேன் என்று கூறி வரும் நித்தியானந்தா எந்த நாட்டில் இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாத நிலையில் தற்போது நித்தியானந்தா விடம் இருந்து மீட்கப்பட்டு வந்த மருத்துவர் மீண்டும் நித்தியானந்தாவிடமே சென்று விட்டாரா? என்ன நேர்ந்தது! என்பது குறித்து எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
Conclusion: இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வியிடம் கேட்ட போது மருத்துவர் காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். தனிப்படை அமைப்பது குறித்து யோசித்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.