தேனி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் ஆண்டிபட்டி, கடமலை-மயிலை ஆகிய இரண்டு ஒன்றியங்களில் நடைபெற்றது. இதில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மேகமலை ஊராட்சிக்குள்பட்ட கோம்பைத்தொழு கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி அருகில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுக, திமுக கட்சியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து திமுக கிளைச்செயலாளர் பெருமாள் (55) என்பவரை அதிமுக பிரமுகர் செல்லத்துரை அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மண்டை உடைந்து படுகாயமடைந்த பெருமாள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் காவல் துறையினர் கூடுதலாகக் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வாலாஜாவில் வாக்கு செலுத்திய அரியலூர் மாவட்ட ஆட்சியர்