ETV Bharat / state

மகள்களுடன் தாய் தற்கொலை வழக்கு: சிறுமியின் பரபரப்பு வாக்குமூலம்...! வீடியோ இணைப்பு! - தாயும் மகளும் தற்கொலை

தேனி: போடியில் மகள்களுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், உறவினர்கள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

child akshaya
author img

By

Published : Oct 25, 2019, 2:27 AM IST

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள ஜே.கே.பட்டி காந்திநகர் காலனியைச் சேர்ந்த தம்பதி பால்பாண்டி - லட்சுமி. இவர்களுக்கு அனுசுயா(16), ஐஸ்வர்யா(14), அக்ஷ்யா(8) ஆகிய மூன்று மகள்கள் இருந்துள்ளனர். சென்னையில் அரிசி வியாபாரம் செய்து வந்த பால்பாண்டி, நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

சிறுமியின் பரபரப்பு வாக்குமூலம்

இதையடுத்து, தையல் வேலை செய்து வந்த லட்சுமி, அக்டோபர் 3ஆம் தேதி விஷம் குடித்து மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். இதில் அனுசுயா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லட்சுமி, அவரது மகள் அக்ஷ்யா, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த லட்சுமி, அக்டோபர் 4ஆம் தேதி உயிரிழந்தார். இதில், மகள் அக்ஷ்யா மட்டும் உயிர் பிழைத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுமி

பின்னர், உயிர் பிழைத்த சிறுமி அக்ஷ்யாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், லட்சுமியின் பெரியப்பா மகன் பாண்டியனின் மகன் முத்துச்சாமியை(28) அனுசுயா காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பாண்டியன்(47), அவரது மனைவி, தனலட்சுமி(44), உறவினர்கள் விஜயகுமார் (39), செல்லத்தாய்(32), அம்பிகா ஆகியோர் லட்சுமியை பார்த்து உனது மகளுக்கு வசதியான மாப்பிள்ளை தேவைப்படுகிறதா எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த லட்சுமி, அன்றிரவு தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பாண்டியன், தனலட்சுமி, விஜயகுமார், செல்லத்தாய் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள அம்பிகாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Intro: போடியில் 3மகள்களுடன் தாயும் தற்கொலை செய்து கொண்ட வழக்கு. தற்கொலைக்கு தூண்டிய உறவினர்கள் 4பேர் கைது. உயிர்பிழைத்த சிறுமியின் வாக்குமூலத்தின் பேரில் காவல்துறையினார் நடவடிக்கை.
Body: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ஜே.கே.பட்டி காந்திநகர் காலணியை சேர்ந்த பால்பாண்டி என்பவரது மனைவி லட்சுமி(36). இவர்களுக்கு 9ம் வகுப்பு படித்த அனுசுயா (16), 8ஆம் வகுப்பு படித்த ஐஸ்வர்யா(14), மற்றும் 4ஆம் வகுப்பு படித்த அக்ஷயா (8) ஆகிய மூன்று பெண் பிள்ளைகள் இருந்தனர். சென்னையில் அரிசி வியாபாரம் செய்ததில், நஷ்டம் ஏற்பட்டதால் சொந்த ஊரான போடிக்கு வந்த பால்பாண்டி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தையல் வேலை செய்து தனது 3பெண் பிள்ளைகளையும் படித்து வளர்த்து வந்துள்ளார் லட்சுமி.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தனது 3பிள்ளைகளுடன் லட்சுமியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் அனுசுயா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் படுக்கையிலே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லட்சுமி மற்றும் அக்ஷயா ஆகியோரை தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து லட்;சுமியும் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். சிறுமி அக்ஷயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
         இது குறித்து வழக்குப்பதிவு செய்து போடி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தயிருந்ததது. இந்நிலையில் இந்த வழக்கின் திருப்பமாக லட்சுமியின் உறவினர்கள் 4பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், லட்சுமியின் பெரியப்பா மகன் பாண்டியன் என்பவரது மகன் முத்துச்சாமியை(28) அனுசுயா காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன்(47), அவரது மனைவி, தனலட்சுமி(44), உறவினர் விஜயகுமார் (39), செல்லத்தாய்(32), அம்பிகா ஆகிய 5பேரும் சேர்ந்து அக்டோபர் 2ஆம் தேதி இரவு வீட்டிற்கு சென்று லட்சுமியை பார்த்து உனது மகளுக்கு வசதியான மாப்பிள்ளை தேவைப்படுகிறதா எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
         இதனால் மனமுடைந்த லட்சுமி அன்றிரவு தனது மகள்களுக்கு டீயில், விஷம் கலந்து கொடுத்து தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
         
Conclusion: இந்த வழக்கில் உயிர் பிழைத்த சிறுமி அக்ஷயாவிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்ததையடுத்து பாண்டியன், தனலட்சுமி, விஜயகுமார், செல்லத்தாய் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். அம்பிகாவை தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.