தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆண்டிபட்டி வைகை அணையில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் மற்றும் தேனியில் செயல்படும் தனியார் வங்கி ஊழியர்கள் நான்கு பேர் உள்பட இன்று (ஆகஸ்ட் 12) ஒரே நாளில் 282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி - பெரியகுளம் சாலையில் செயல்படும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த வங்கிக் கிளை அலுவலகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டன.
மேலும் கோம்பை, பெரியகுளம், சின்னமனூர், ஆண்டிபட்டி, போடி தர்மத்துப்பட்டி, தேனி பகுதிகளைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். இதில், இருவரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டாயிரத்து 836ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை ஐந்தாயிரத்து 739பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டாயிரத்து 998 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.