தேனி மாவட்டம் போடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக எஸ்டேட் மணி என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், எஸ்டேட் மணி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தேனி மாவட்ட செயலாளர் கௌர்மோன்தாஸ் என்பவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், கௌர்மோன்தாஸ் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், அவரது வீட்டிலிருந்த சூட்கேஸ்களில் கத்தி, அரிவாள், ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும், கோயில் கலசங்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, காவல் துறையினர் கௌர்மோன்தாஸை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.