கரோனா நோய்ப் பரவல் தேனி மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களைப் போல் உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மாவட்டத்தில் நேற்று முன் தினம்(ஜூலை 10) புதிதாக 119 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கம்பத்தைச் சேர்ந்த 56 வயது ஆண் மற்றும் க.புதுப்பட்டியைச் சேர்ந்த 63 வயது பெண் என இருவர் உயிரிழந்தனர்.
தொற்று ஏற்பட்டவர்களில் கம்பம், தேனி, பெரியகுளம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகம். தேனி மாவட்டத்தில் இதுவரை 1,614 பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,066 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் நோய்த் தொற்று ஏற்பட்ட 118 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து அங்கு மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையம் மற்றும் ஏ.டி.எம். தவிர்த்து, அத்தியாவசியக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் திறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேற்று(ஜூலை 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொதுமக்களின் நலன் கருதி வருகின்ற ஜூலை 13 முதல் 18ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாமில் இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்தந்த வட்டார மருத்துவக்குழுவின் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் கரோனா தொற்றுத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட உள்ளன.
நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஒன்றியம் வாரியாக:
ஆண்டிபட்டி ஒன்றியம் : ஜூலை 13 – ஆண்டிபட்டி பேரூராட்சி வார்டு -1, மற்றும் டி.சுப்புலாபுரம், அம்மச்சியாபுரம், கொத்தபட்டி, ரெங்கநாதபுரம் ஊராட்சிகள்.
ஜூலை 14 – ஆண்டிபட்டி பேரூராட்சி வார்டு - 8, சீதராம்தாஸ் நகர், மற்றும் குன்னூர், பிச்சம்பட்டி ஊராட்சிகள்.
ஜூலை 15 – ஆண்டிபட்டி பேரூராட்சி வார்டு -3, 10 மற்றும் மொட்டனூத்து, மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சிகள்.
ஜூலை 16 – ஆண்டிபட்டி பேரூராட்சி வார்டு -7, 13, ரோசனம்பட்டி ஊராட்சி.
ஜூலை 17 – ஆண்டிபட்டி பேரூராட்சி வார்டு -5, 17 மற்றும் கோவில்பட்டி ஊராட்சி.
ஜூலை 18 – ஆண்டிபட்டி பேரூராட்சி வார்டு -2, 18.
கடமலை – மயிலை ஒன்றியம் :
ஜூலை 13 – மீனாட்சிபுரம், வருசநாடு ஊராட்சிகள்.
ஜூலை 14 – கடமலைக்குண்டு, முத்தலாம்பாறை ஊராட்சிகள்.
ஜூலை 15 – பாலூத்து, மயிலாடும்பாறை ஊராட்சிகள்.
ஜூலை 16 – ராஜேந்திரா நகர், பொம்மராஜபுரம் ஊராட்சிகள்.
ஜூலை 17 – முத்துரெங்கபுரம், தங்கம்மாள்புரம் ஊராட்சிகள்.
ஜூலை 18 – கண்டமனூர் ஊராட்சி.
கம்பம் ஒன்றியம் :
ஜூலை 13 – கம்பம் நகராட்சி வார்டுகள் - 01, 14, 25, 27.
ஜூலை 14 – கம்பம் நகராட்சி வார்டுகள் - 04, 14, 17, 29
ஜூலை 15 – கம்பம் நகராட்சி வார்டுகள் - 03, 19, 23, 24, 26.
ஜூலை 16 – கம்பம் நகராட்சி வார்டுகள் - 10, 12, 15, 18, 20.
ஜூலை 17 – கம்பம் நகராட்சி வார்டுகள் - 30, 31, 32.
ஜூலை 18 – கம்பம் நகராட்சி வார்டுகள் - 05, 06, 07, 11, 28.
சின்னமனூர் ஒன்றியம் :
ஜூலை 13 – சின்னமனூர் நகராட்சி வார்டுகள் - 04, 17 மற்றும் ஓடைப்பட்டி, குச்சனூர், இராமகிருஷ்ணாபுரம் ஊராட்சிகள்.
ஜூலை 14 – சின்னமனூர் நகராட்சி வார்டுகள் - 03, 26 மற்றும் காமாட்சிபுரம் ஊராட்சி.
ஜூலை 15 – சின்னமனூர் நகராட்சி வார்டுகள் - 10, 14 மற்றும் பூலாநந்தபுரம் ஊராட்சி.
ஜூலை 16 – சின்னமனூர் நகராட்சி வார்டுகள் - 02, 13 மற்றும் அழகாபுரி ஊராட்சி.
ஜூலை 17 – சின்னமனூர் நகராட்சி வார்டுகள் - 05, 06.
ஜூலை 18 – சின்னமனூர் நகராட்சி வார்டுகள் -12, 19.
உத்தமபாளையம் ஒன்றியம் :
ஜூலை 13 – உத்தமபாளையம் பேரூராட்சி வார்டு-6 மற்றும் நாகையகவுண்டன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி.
ஜூலை 14 – உத்தமபாளையம் பேரூராட்சி வார்டு -1 மற்றும் இராயப்பன்பட்டி ஊராட்சி.
ஜூலை 15 – உத்தமபாளையம் பேரூராட்சி வார்டு -5 மற்றும் ஆனைமலையன்பட்டி ஊராட்சி.
ஜூலை 16 – உத்தமபாளையம் பேரூராட்சி வார்டு -10.
ஜூலை 17 – உத்தமபாளையம் பேரூராட்சி வார்டு -4.
ஜூலை 18 – உத்தமபாளையம் பேரூராட்சி வார்டு -14.
போடிநாயக்கனூர் ஒன்றியம் :
ஜூலை 13 – போடி நகராட்சி வார்டுகள் - 27, 31 மற்றும் மேலச்சொக்கநாதபுரம், டொம்புச்சேரி, கோடாங்கிபட்டி, ராசிங்காபுரம் ஊராட்சி.
ஜூலை 14 – போடி நகராட்சி வார்டுகள் -13, 23, வினோபாஜி காலனி மற்றும் பத்ரகாளிபுரம் ஊராட்சி
ஜூலை 15 – போடி நகராட்சி வார்டுகள் -10, 20 மற்றும் பெருமாள்கவுண்டன்பட்டி ஊராட்சி.
ஜூலை 16 – போடி நகராட்சி வார்டுகள் -01, 33 மற்றும் சில்லமரத்துப்பட்டி ஊராட்சி.
ஜூலை 17 – போடி நகராட்சி வார்டுகள் -06, 14.
தேனி ஒன்றியம் :
ஜூலை 13 – தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டுகள் -01, 12, 20, 31, பழனிசெட்டிபட்டி பேரூர் வார்டு - 3 மற்றும் அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, தர்மாபுரி ஊராட்சிகள்.
ஜூலை 14 – தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டுகள் -03, 10, 19, 27, பழனிசெட்டிபட்டி பேரூர் வார்டு – 7, மற்றும் அரண்மனைப்புதூர் (முல்லை நகர்), தப்புக்குண்டு ஊராட்சிகள்.
ஜூலை 15 – தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டுகள் -07, 11, 22, 29, பழனிசெட்டிபட்டி பேரூர் வார்டு - 15 மற்றும் வீரபாண்டி, கோட்டைப்பட்டி ஊராட்சிகள்.
ஜூலை 16 – தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டுகள் - 06, 14, 23, 30, பழனிசெட்டிபட்டி பேரூர் வார்டு - 4 மற்றும் வீரபாண்டி, ஊஞ்சாம்பட்டி(அன்னஞ்சி) ஊராட்சிகள்.
ஜூலை 17 – தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டுகள் -14, 15, 26, 33, பழனிசெட்டிபட்டி பேரூர் வார்டு – 8 மற்றும் வீரபாண்டி, ஊஞ்சாம்பட்டி ஊராட்சிகள்.
ஜூலை 18 – தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டுகள் -04, 08, 13, 20, 28.
பெரியகுளம் ஒன்றியம் :
ஜூலை 13 – பெரியகுளம் நகராட்சி வார்டுகள் – 01, 15,25, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, தாமரைக்குளம் பேரூராட்சிகள் மற்றும் வடபுதுப்பட்டி (ஆயதப்படை காவலர் குடியிருப்பு), எ.புதுப்பட்டி ஊராட்சிகள்.
ஜூலை 14 – பெரியகுளம் நகராட்சி வார்டுகள் – 08, 14, 21, ஜெயமங்கலம், வடுகபட்டி பேரூராட்சிகள் மற்றும் சொக்கத்தேவன்பட்டி, எண்டப்புளி ஊராட்சிகள்.
ஜூலை 15 – பெரியகுளம் நகராட்சி வார்டுகள் – 02, 22, 24, குள்ளப்புரம், வடுகபட்டி பேரூராட்சிகள் மற்றும் சருத்துப்பட்டி, எ.புதுக்கோட்டை ஊராட்சிகள்.
ஜூலை 16 – பெரியகுளம் நகராட்சி வார்டுகள் – 03, 07, 28, குள்ளப்புரம், வடுகபட்டி பேரூராட்சிகள் மற்றும் மதுராபுரி ஊராட்சி.
ஜூலை 17 – பெரியகுளம் நகராட்சி வார்டுகள் – 04, 18, குள்ளப்புரம் பேரூராட்சி மற்றும் அழகர்சாமிபுரம், மேல்மங்கலம் ஊராட்சிகள்.
ஜூலை 18 – பெரியகுளம் நகராட்சி வார்டுகள் – 20, 23, 30, வடபுதுப்பட்டி, பெருமாள்புரம் ஊராட்சிகள்.
அறிவிக்கப்பட்டுள்ள நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.