தேனி அருகே உள்ள ரத்தினம் நகரைச் சேர்ந்தவர் வருசை பீர் மைதீன் - நபிலாபேகம் தம்பதியினர். இவர்களது இரண்டரை வயது குழந்தை முகமது நதீனிடம் குழந்தைப் பருவத்திலேயே பழங்கள், பூக்கள் படங்களைக் காட்டி அதன் பெயர்களைக் கூறி விளையாடி மகிழ்ந்து வந்துள்ளனர் குழந்தையின் பெற்றோர். ஆனால் குழந்தையோ விளையாட்டாக இல்லாமல், தனது கூர்மையான அறிவுத்திறனால் அவற்றைக் காணும் போதெல்லாம் மீண்டும், மீண்டும் அதனை உச்சரிக்கத் தொடங்கியுள்ளார்.
ஒரு நிமிடத்தில் 30 நாடுகளின் கொடிகளைப் பார்த்தவுடன் அந்தந்த நாடுகளின் பெயர்களைச் சொல்லும் அளவிற்கு குழந்தையின் ஞாபகத் திறன் அதிகரித்ததுள்ளது. இதற்காக 'வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' என்ற சாதனை அமைப்பிலும் குழந்தையின் சாதனை பதியப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு கற்றல் எப்படி இருக்கவேண்டுமென்றால் கனிந்த பழமாக இருக்க வேண்டும். அப்படி குறும்புத்தனங்கள் நிறைந்த குழந்தை பருவத்திலேயே தனது அபார ஞாபகத்திறனால் உலக சாதனைகளை குவித்து வரும் சிறுவன் முகமது நதீன் பாராட்டுக்குரியவரே..!
இதையும் படிங்க...எருது விடும் விழா: பைக்கை பரிசாக வென்ற காளைகள்