தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகேயுள்ள தென்றல் நகரில் வசித்துவருபவர் ஈஸ்வரன். இவரது மகன் அருண்பாண்டிக்கும் (28) அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மணப்பெண் வேறொருவரை காதலித்து வந்ததால், இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தான் காதலித்தவரையே அப்பெண் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனால், மனவிரக்தியில் இருந்த அருள்பாண்டி திருச்சியிலுள்ள தனது சகோதரியிடம் இது தொடர்பாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, அருள்பாண்டியனுக்கும், எட்டாம் வகுப்பு படித்த அவரது அக்கா மகளுக்கும் திருமணம் முடித்துவைக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தியது குறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அல்லி நகரம் சென்ற அக்குழுவினர் சிறுமியை மீட்டு அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதையும் படிங்க: போலி கால்சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி