ETV Bharat / state

கீழே கிடந்த 7 சவரன் நகை.. போலீசிடம் ஒப்படைத்த நபருக்கு குவியும் வாழ்த்து! - podi news

கீழே கிடந்த 7 பவுன் தங்க நகையை பத்திரமாக காவல்துறையில் ஒப்படைத்த நபருக்கு காவல் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தவற விட்ட நகையை பத்திரமாக மீட்ட நபருக்கு குவியும் பாராட்டுக்கல்!

author img

By

Published : Jun 2, 2023, 4:21 PM IST

தேனி: தவற விட்ட நகையைப் பத்திரமாக மீட்டு காவல் துறையில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. போடி அருகே பத்ரகாளி புரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குருசாமி மனைவி ராஜேஸ்வரி (வயது 38). இவர் இன்று (ஜூன் 2) போடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டையல் வங்கியில் தனது 7 பவுன் தங்க நகையை அடகு வைப்பதற்காக வந்துள்ளார். அப்போது வங்கி முன் வந்து அடகு வைக்க எடுத்து வந்த நகையைப் பார்த்துள்ளார்.

ஆனால், எடுத்து நகை பை காணாமல் போய் இருந்தது. எனவே கொண்டு நகையைத் தவற விட்டதாகக் கூறி ராஜேஸ்வரி போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது வங்கி முன்பு நகையுடன் ஒரு பை கிடந்துள்ளது. அப்போது அந்த பையை எடுத்த போடி புது காலனி சேர்ந்த சுப்ரமணி மகன் ராம் சென்றாயன் (வயது 39) என்பவர் போடி நகர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று அந்த நகைப் பையை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ள முடிவு - பூவுலகின் நண்பர்கள் நன்றி

அப்போது ராஜேஸ்வரி நகையை தொலைத்ததாகப் புகார் அளிக்க வந்த நிலையில் காவல்துறையினர் ராஜேஸ்வரியிடம் நகையின் அடையாளங்கள் குறித்து கேட்டறிந்தனர். அனைத்து அடையாளங்களும் சரியாக இருந்ததன் அடிப்படையில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நகை ராஜேஸ்வரியின் நகை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, இதைத் தொடர்ந்து போடி நகர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, அந்த நகையை ராஜேஸ்வரியிடம் ஒப்படைத்தார்.

பின்னர், நகைக்கு ஆசைப்படாமல் தவறவிட்ட நகையை உரிய நபரிடம் ஒப்படைக்க போடி நகர் காவல் நிலையத்தில் வந்த ராம் சென்றாயன் என்பவரின் நல்ல குணத்தைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி காவல்துறையினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, நகையை தவறவிட்ட ராஜேஸ்வரி சென்றாயனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

மனிதாபிமானத்தோடு அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் காவல் நிலையத்தில் கீழே இருந்து எடுக்கப்பட்ட நகையை ஒப்படைத்த ராம் சென்றாயனுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க: கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதி?... திருச்சி அருகே நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.