தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,360 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்புப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் பேசிய ஓபிஎஸ், சமுதாய வளைகாப்பு விழாவானது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 1912-13ல் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருவதாக தவறுதலாக பேசினார்.
இதையும் படிங்க:
ஓபிஎஸ் 2.0 - விஜயகாந்த் பட பாணியில் கலக்கும் துணை முதலமைச்சர்