தேனி: பெரியகுளம் அருகே உள்ள செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த கண்ணன், மரகதம் தம்பதியரின் 10 வயது சிறுவன் பிரித்திவ். இந்த சிறுவன் அதே பகுதியில் அவனது தாய் சிறப்பாசிரியராக வேலை பார்க்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த சிறுவன் ஏதாவது ஒன்றில் சாதனைப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கையை மடக்கிய நிலையில் கால் மற்றும் கையை தரையில் ஊன்றி, படுக்கை நிலையில் உடல் முழுவதும் தரையில் படாமல் நீண்ட நேரம் இருப்பதற்கான பயிற்சியைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். இதனை உடற்பயிற்சியில் பிளங்க் (plank) என்பர்.
இந்நிலையில் இன்று சிறுவன் பிரித்திவ் குளோபல் உலக சாதனை அமைப்பினர் முன்னிலையில் தொடர்ந்து 8 நிமிடங்கள் பிளங்க் (plank) செய்து சாதனைப் படைத்துள்ளார்.
இதுவரையில் 30 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் மட்டுமே இதில் உலக சாதனை செய்துள்ள நிலையில், 10 வயது சிறுவன் 8 நிமிடங்கள் தொடர்ந்து இந்த சாகச நிகழ்ச்சியில் செய்துள்ளது இதுவே முதல்முறையாக பதிவாகியுள்ளது.
மேலும் இந்த சாதனை குறித்து சிறுவன் கூறுகையில், '30 வயதுக்கு மேற்பட்டோர் ஏற்கெனவே செய்த உலக சாதனையை முறியடிக்கப் பயிற்சி மேற்கொண்டேன். அதன்படி, 15 வயதில் 30 வயதுக்கு மேல் செய்தவரின் சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனைப் படைக்க உள்ளேன். குளோபல் உலக சாதனைப் படைக்க தன்னை ஊக்கப்படுத்திய பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறுவன் நன்றி’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலைய சிஐஎஸ்எஃப் டிஐஜி-க்கு 'அதி உத்ரிஷ்த்' பதக்கம்