தேனி: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் தேனி மாவட்டத்தில் பரப்புரை செய்கிறார். முதல் நாளான இன்று ஆண்டிபட்டி, கம்பவம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளிலும், நாளை போடி, பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிகளிலும் பரப்புரை செய்யவுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் பரப்புரை செய்துவிட்டு மொட்டனூத்து ஊராட்சியில் பரப்புரைக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக நின்று வரவேற்றனர். இதனிடையே கூட்டத்தில், இருந்த கன்னியப்பிள்ளைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தங்கள் ஊருக்கு கிரிக்கெட் மட்டை வழங்குமாறு உதயநிதி ஸ்டாலினிடம் கடிதம் வழங்கினார்.
அந்தக்கடிதத்தில், அன்புள்ள திமுக கட்சியினருக்கு, எங்களுக்கு கிரிக்கெட் பேட் தேவை. அதனால், எங்கள் ஊருக்கு கிரிக்கெட் பேட் வழங்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அந்த சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் வழங்கப்படும் எனக்கூறிவிட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: ’திமுகவை விட டிடிவி.தினகரனால்தான் அதிக தொல்லை’