தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாரயணத்தேவன்பட்டியில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்காத அதிமுக அரசு, இடைத்தேர்தல் வந்தால் மட்டும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிக்கை வெளியிடுகின்றனர்.
கரோனா வைரஸ் பரிசோதனை கண்டறியும் கருவி வாங்குவதில்கூட இந்த அரசு ஊழல் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் இந்த அரசு தவறிவிட்டது. மேலும் எதிர்க்கட்சிகள் செய்யக் கூடிய நல்ல காரியங்களை இந்த அரசு கட்டுப்படுத்துகிறது. இதனால் நிவாரண பொருள்கள் வழங்குவதற்குக்கூட நீதிமன்றத்திற்கு சென்று நீதி பெற வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் பார்க்க: கரோனா தடுப்பு : சிறப்பு அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை