ETV Bharat / state

கட்சி பொறுப்புகளில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கம் - டிடிவி தினகரன்

தேனி: கட்சி கட்டுபாடுகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததால், அமமுகவில் வகித்த பொறுப்புகளில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்பட்டதையடுத்து கம்பத்தில் உள்ள அவரது அலுவலகம் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

பூட்டப்பட்டுள்ள தங்க தமிழ்செல்வன் அலுவலகம்
author img

By

Published : Jun 25, 2019, 5:00 PM IST

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அமமுக கொள்கை பரப்பு செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரனை விமர்சித்து தங்க தமிழ்செல்வன் பேசிய ஆடியோ ஒன்று நேற்று வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மதுரை, தேனி மாவட்ட அமமுக ஒன்றிய, நகர கழக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை நடத்தினார். அதில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களில் பேசியதால், அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர், தேனி மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்தார்.

இந்நிலையில் கம்பத்தில் செயல்பட்டு வந்த தங்க தமிழ்செல்வனின் அலுவலகம் தற்போது பூட்டப்பட்டுள்ளது. மேலும் அவரது ஆதரவாளர்களை தொடர்பு தங்க தமிழ்செல்வன் குறித்து கேட்டபோது, தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Intro: அமமுகவில் தங்கதமிழ்செல்வன் வகித்த வந்த பதவிகளை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் நீக்கியதையடுத்து கம்பத்தில் அவரது அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.

Body: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அமமுக கொள்கை பரப்பு செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுமான தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரனை விமர்சித்து தங்கதமிழ்செல்வன் பேசிய ஆடியோ நேற்று வெளியானதையடுத்து அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தேனி மாவட்ட அமமுக ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகளுடன் தினகரன் இன்று ஆலோசனை நடத்தினார். அதில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களில் பேசியது தொடர்பாக தங்கதமிழ்செல்வனை அக்கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக எச்சரித்ததாகவும், அதனை மீறி அவர் செயல்பட்டதால் தற்போது வகித்து வந்த கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் தேனி மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தினகரன் அறிவித்தார்.
இதனிடையே தினகரனை விமர்சித்து பேசியது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு இன்று காலை போனில் தொடர்பு கொண்டு பேசிய தங்கதமிழ்செல்வன், தான் பேசியதை ஒப்புக்கொண்டார். மேலும் தன் மீது தவறு இருந்தால் கட்சியில் இருந்து நீக்கட்டும் என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் செயல்பட்டு வந்த தங்கதமிழ்செல்வனின் அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும் அவரது வீடு, தோட்டம் மற்றும் பன்னை வீடுகள் என அவரது ஆதரவாளர்களிடம் தொடர்பு கொண்ட போதும், எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. அவர் கேரளாவிற்கு சென்றுவிட்டதாகவும் சிலர் தகவல் கூறுகின்றனர்.

Conclusion: இதனிடையே தங்கதமிழ்செல்வனின் ஆதரவாளர்களிடம் பேசிய போது, இன்னும் இரண்டு தினங்களுக்கு பொது வெளியில் அவர் யாரையும் சந்திக்க மாட்டார் எனவும், தகுந்த ஆதாரங்களுடன் இரு தினங்களுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.