தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திமுக கூட்டணி 37 தொகுதிகளையும், புதுச்சேரியில் ஒரு மக்களவைத் தொகுதியையும் கைப்பற்றியது. மேலும், 13 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் வென்றது.
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றிப் பெற்றார். மேலும், ஒன்பது சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்நிலையில் இன்று அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமியை பாஜக தூக்கிவிட்டு ஓபிஎஸ்ஸை மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக கொண்டுவரும் என அதிரடியாக தெரிவித்தார்.
மேலும், தேனி மக்களவைத் தொகுதியில் மகனை வெற்றிபெற வைத்த ஓபிஎஸ், பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றிபெறதாதது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.