ETV Bharat / state

ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா - தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு - திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன்

தேனி: உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு
தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு
author img

By

Published : Dec 26, 2019, 6:28 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னன்படுகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பழுதடைந்த சத்துணவு கூட கட்டடம் இடிந்துவிழுந்தது. இதில் வலது கையை இழந்த மாணவர் செல்வக்குமாரின் குடும்பத்தினரை, திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களிடம் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. பொதுத் தேர்தல் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெறும் வேலையில், ஆளுங்கட்சியினர் இறங்கியுள்ளனர். ஓட்டுக்கு 200 முதல் 300 ரூபாய் வரையில் விநியோகம் செய்யப்படுகிறது. அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அது நிச்சயம் நடக்காது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்தான் மிகப்பெரிய வெற்றி பெறும்" என்று உறுதிப்படத் தெரிவித்தார்.

தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

மேலும், பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிமுக, பாமக ஆதரித்து வாக்களித்தது மன்னிக்க முடியாது எனவும் அதிமுக செய்த ஊழலால் வருமான வரி சோதனைக்கு பயந்தே, பாஜக கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறுவது தவறு - தங்க தமிழ்செல்வன்

Intro: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேட்டி.
Body: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னன்படுகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த சத்துணவு கூட கட்டிடம் இடிந்து விழுந்து வலது கையை இழந்த மாணவர் செல்வக்குமாரின் குடும்பத்தினரை, தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களிடம் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் தி.மு.கவிற்கு இல்லை. பொது தேர்தல் போலவே உள்ளாட்சி தேர்தலிலும் பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெறும் வேலையில், ஆளும் கட்சியினர் இறங்கியுள்ளனர். ஓட்டுக்கு ரூ.200 முதல் 300 வரையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அது நிச்சயம் நடக்காது. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் மிகப்பெரிய வெற்றி பெறும்.
பாஜக கொண்டு வந்த குடியுரிமை திருத்த மசோதாவை அ.தி.மு.க மற்றும் பா.ம.க ஆதரித்து வாக்களித்தது மன்னிக்க முடியாத குற்றம். இதனை எதிர்க்க கூடிய தைரியம் அதிமுகவிற்கு இல்லை. அவர்கள் செய்த ஊழலால் வருமான வரி சோதனைக்கு பயந்தே, பாஜக கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றனர். இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயமாக இது அவர்களுக்கு எதிராகவே உள்ளது.

Conclusion: பேட்டி : தங்கதமிழ்செல்வன் - கொள்கை பரப்பு செயலாளர், திமுக.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.