ETV Bharat / state

கேரள அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் முற்றுகை போராட்டம்! - விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகைப் போரட்டம்

தேனி: சுரங்கனாறு நீர்வீழ்ச்சியை மறித்து தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகைப் போரட்டம் நடத்தினர்.

விவசாயிகள் முற்றுகை போராட்டம்
author img

By

Published : Nov 20, 2019, 9:52 PM IST

தேனி மாவட்டம் கூடலூரில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவரத்தை ஒட்டியுள்ளது சுரங்கனாறு நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் தண்ணீரானது கூடலூர் ஒட்டான்குளம் வந்து சேர்கிறது. இந்தக் குளத்தில் தேக்கப்படுகிற தண்ணீரால் ஈஸ்வரன்கோவில்புலம், பாரவந்தான், ஒழுகுவழி பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுவதுடன், இப்பகுதி கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரை தேக்க கேரளப் பகுதியான அருவிக் குழியில் தடுப்பணை அமைத்துள்ளது. அதில் கால்மிதி படகு (பெடல்போட்) விட்டு வருமானம் பெருக்க முடிவு செய்துள்ளது. இப்பகுதியில் தடுப்பணை அமைந்தால், கூடலூர் ஒட்டான்குளத்து நீரை நம்பியுள்ள நெல் விவசாயம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சுரங்கனாறு நீர்வீழ்ச்சியை மறித்து தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக லோயர்கேம்பிலுள்ள பென்னிகுக் மணி மண்டபத்தில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் முற்றுகை போராட்டம்

இதில் தமிழ்நாடு விவசாயிகள் பாதிப்படையும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வரும் கேரள அரசைக் கண்டித்தும், ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்டு வருவதைக் கண்டித்தும் விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!

Intro:          கேரள அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் முற்றுகை போராட்டம்.          
சுரங்கனாறு நீர்வீழ்ச்சியை மறித்து தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து, தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்தில் ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகைப் போரட்டம் நடத்தினர்.
Body: தேனி மாவட்டம் கூடலூரில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவரத்தை ஒட்டியுள்ளது சுரங்கனார் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் தண்ணீரானது கூடலூர் ஒட்டான்குளம் வந்து சேர்கிறது. இந்த குளத்தில் தேக்குகின்ற தண்ணீரால் ஈஸ்வரன்கோவில்புலம், பாரவந்தான், ஒழுகுவழி பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுவதுடன், இப்பகுதி கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரை கேரளப்பகுதியான அருவிக்குழியில் தடுப்பணை அமைத்து அதில் கால்மிதி படகு (பெடல்போட்) விட்டு வருவமாணம் பெருக்க முடிவு செய்துள்ளது. இப்பகுதியில் தடுப்பணை அமைந்;தால் கூடலூர் ஒட்டான்குளத்து நீரை நம்பியுள்ள நெல் விவசாயம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சுரங்கனாறு நீர்வீழ்ச்சியை மறித்து தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் லோயர்கேம்பிலுள்ள பென்னிகுக் மணி மண்டபத்தில் முற்றுகைப்போரட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக விவசாயிகள் பாதிப்படையும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வரும் கேரள அரசைக் கண்டித்தும், ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்டு வருவதைக் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பி, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion: பேட்டி : எஸ்.ஆர்.தேவர் (ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.