ETV Bharat / state

மகனுக்கு மனம் முடிக்காத ஏக்கம் - பிறந்தநாளில் முதியவர் தற்கொலை! - தேனி

தேனியில் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத ஏக்கத்தில் 78 வயது முதியவர் ஒருவர் , தனது பிறந்தநாளன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகனுக்கு திருமணம் நடக்கவில்லை - பிறந்தநாளில் முதியவர் தற்கொலை!

author img

By

Published : Jun 17, 2022, 1:42 PM IST

தேனி: பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் கடற்கரை... இவரது மனைவி லலிதா.. இருவருக்கும் ஐந்து பெண் குழந்தைகள் உட்பட எட்டு குழந்தைகள். இவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக பெரியகுளம் பகுதியில் பலகாரகடை நடத்தி வந்தனர். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ஐந்து மகள்களுக்கும் இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடித்து வைத்தனர்.

ஆனால் அவரது ஏழாவதாக மகனான கார்த்திக்குமாருக்கு மட்டும் திருமணம் செய்து வைக்க கடற்கரை பலமுறை முயற்சி செய்தும் நடக்கவில்லை. மனம் உடைந்து போன முதியவர் கடற்கரைக்கு மேலும் வேதனை தரும் நிகழ்வாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக நடத்தி வந்த பலகார கடையை தொடர்ந்து நடத்த அவரால் முடியவில்லை.

அவரது வருமானம் முற்றிலுமாக முடங்கியது; ஒரு பக்கம் மகனுக்கு திருமணம் முடிக்கவில்லை என்ற வேதனை; மற்றொரு பக்கம் பல ஆண்டுகளாக தன்னுடைய குடும்பத்துக்கு வாழவைத்த பலகார கடையை மூடியது என முதியவர் கடற்கடை மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய 78 ஆவது பிறந்தநாள் அன்று தன்னுடைய மகனுக்கும், காவல் துறைக்கும், அண்ணன் மகன் ஆகிய மூவருக்கும் உருக்கமான கடிதம் எழுதிவைத்து விட்டு முதியவர் கடற்கரை தற்கொலை செய்துகொண்டார்.

அந்த கடிதத்தில் ”இதில் தான் பெற்ற மகனான கார்த்திக் குமாருக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய காரியத்தை செய்து வைக்க முடியாத மன அழுத்தத்தால் தற்கொலை முடிவை எடுத்ததாகவும், தன் உடலை வாங்கி எந்த சடங்குகளும் செய்யாமல் எரித்தி விடு” என குறிப்பிட்டு மனிதப்பிறவி மகத்தானது அதை மற்றவர்களுக்கு அர்ப்பணிக்கும் போது தான் முழுமை பெறும் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

மேலும் சகோதரர் மகன் மற்றும் காவல் ஆய்வாளருக்கு எழுதிய கடிதத்தில் ”தான் எடுத்த இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை என்றும் தான் சுய நினைவோடு எடுத்த முடிவு என்றும், என் உடலை தன் அண்ணன் மகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வாங்க விருப்பம் இல்லை என்றால் காவல்துறையினர் இதுபோன்ற விஷயங்களில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் தெரிவித்ததோடு; தன் அண்ணன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் பெண் குழந்தைகள் ஆவணங்கள் சம்பந்தமாக உதவி கேட்டால் உதவி செய்யுமாறு உருக்கமாக கேட்டுள்ளார்”.

ஒரு தந்தை தான் பெற்ற மகனுக்கு திருமணம் முடித்து வைக்க முடியாத நிலையை எண்ணி மனம் உடைந்து பிறந்தநாளன்று மரணத்தை தேடிக்கொண்ட சம்பவம் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.

இதையும் படிங்க: திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் இளைஞர் படுகொலை - கஞ்சா போதை காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.