ETV Bharat / state

காற்றாலை கழிவுகளால் நோய்த் தொற்று அபாயம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு - animals affect windmills

தேனி: ஆண்டிபட்டி அருகே காற்றாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் விளைநிலங்களுக்கு அருகாமையில் கொட்டிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காற்றாலை கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு
காற்றாலை கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு
author img

By

Published : Jan 6, 2020, 11:44 AM IST

Updated : Jan 6, 2020, 1:37 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் - அம்மச்சியாபுரம் சாலையில் நந்தீஸ்வரன் கோயில் எதிரே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் காற்றாலைக் கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இவைகளில் நெகிழிப் பைகள், சோடா உள்ளிட்ட ரசாயனக் கழிவுகள், உபகரணக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், ஆலைக் கழிவுகள் என உயிருக்கு தீங்கு விளைவிப்பவைகளே அதிகளவில் காணப்படுகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேபோல் இப்பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது காற்றாலைக் கழிவுகளை சிலர் இரவோடு இரவாக வந்து இங்கு கொட்டி வருவதால், இப்பகுதியில் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் உள்ளிட்டவை பாதிப்படைந்துள்ளது.

காற்றாலை கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு

இது குறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த விவசாயிகள், 'தற்போது காற்றாலைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடமானது, பல வருடங்களுக்கு முன்னர் கண்மாயாக இருந்ததாகவும், காலப்போக்கில் நீர்வழிப்பாதையில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளால் கண்மாய் காணாமல் போய், கழிவுகளின் கூடாரமாக மாறியதாகவும் தெரிவிக்கின்றனர். காற்றாலைக் கழிவுகள் எளிதில் தீப்பற்றக்கூடியதாலும், இதிலுள்ள எண்ணெய்க் கழிவுகள் மண்ணில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் கழிவுகளை உண்டு உயிரிழக்க நேரிடுகிறது என்றும் புகார் தெரிவிக்கின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காணொலி கலந்தாய்வு மூலம் காவல் நிலையங்களை திறந்துவைத்த முதலமைச்சர்!

Intro: ஆண்டிபட்டி அருகே விளை நிலங்களுக்கு அருகில் கொட்டப்படும் காற்றாலை கழிவுகள். சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசு ஏற்படும் அபாயத்தால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்.

Body: தேனி மாவட்டத்தில் தேவாரம், கோம்பை, கண்டமனூர், கடமலைக்குண்டு, வருசநாடு, ஆண்டிபட்டி, திருமலாபுரம், கோவிந்த நகரம், வெங்கடாசலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்குகிறது. பெரும்பாலும் விவசாய விளை நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த காற்றாலைகளை பல தனியார் நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த காற்றாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தப்படாமல் விளைநிலங்களுக்கு அருகாமையில் கொட்டப்படுவது நமது ஈடிவி பாரத் மேற்கொண்ட கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் - அம்மச்சியாபுரம் சாலையில் நந்தீஸ்வரன் கோவில் எதிரே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் காற்றாலை கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.
காற்றாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கவர்கள், சோடா உள்ளிட்ட ரசாயனக் கழிவுகள், உபகரணக் கழிவுகள், மருத்துவக்கழிவுகள், ஆலைக் கழிவுகள் என உயிருக்கு தீங்கு விளைவிப்பவைகளே அப்பகுதியில் நிறைந்து காணப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் பெரிதும் பாதிப்படைந்தோம். அதனை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டது.
ஆனால் தற்போது காற்றாலை கழிவுகளை சிலர் இரவோடு இரவாக வந்து இங்கு கொட்டி வைத்துள்ளனர். இதனால் இப்பகுதி சுற்றுச்சூழல் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. இதன் காரணமாக விலை நிலங்கள் பாதிப்படைந்து மண் மலடாகி விவசாயம் அழிந்து விடும் அபாயம் உள்ளதாக அச்சம் கொள்கிறார் திருமலாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி நலமகாராஜன்.
பேட்டி : 1) நலமகாராஜன் - (விவசாயி, திருமலாபுரம்)
விவசாயத்தை பிரதானமாக கொண்ட தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் விளைநிலங்கள், காடுகள், உள்ளிட்ட பகுதிகளியே கால்நடைகளின் மேய்ச்சலுக்காக பயன்படுத்துகின்றனர் விவசாயிகள். அவ்வாறு செல்கின்ற இடங்களில் கிடக்கின்ற கழிவுகளை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உண்ண நேர்ந்தால் அவை உயிரிழக்கக் கூடும். மேலும் வீட்டு உயிரினமான நாய் இந்த காற்றாலை ரசாயனக் கழிவுகளை நுகர்ந்தால் உடனடியாக உயிர் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் நோய் தொற்று உண்டாகும் அபாயம் உள்ளது.
பேட்டி : 2)சந்தன பாண்டி - (கால்நடை வளர்ப்பு விவசாயி - ராமநாதபுரம்).

தற்போது காற்றாலை கொட்டப்பட்டுள்ள இடமானது, பல வருடங்களுக்கு முன்னர் கண்மாயாக இருந்ததாகவும், இப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாகவும் திகழ்ந்து வந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் நீர்வழிப்பாதையில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளால் கண்மாய் காணாமல் போய், கழிவுகளின் கூடாரமாக மாறியது. அதிலும் காற்றாலை கழிவுகள் எளிதில் தீப்பற்றக்கூடியது. இதிலுள்ள எண்ணெய்க் கழிவுகள் மண்ணில் கலப்பதால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து அருகாமையில் உள்ள விளைநிலங்கள் அழிந்து விடும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இத்தகைய கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றார்.
பேட்டி : 3) பவுன்ராஜ் - (விவசாயி - மரிக்குண்டு )
பொதுவாக மருத்துவமனை, மற்றும் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அந்த விதிமுறைகளை பலர் கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பாதிப்படைவது பொதுமக்கள் மட்டுமல்லாது பல உயிரினங்களும் கூட.

Conclusion: கால்நடைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய கழிவுகள் கொட்டப்படாமல் தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஈடிவி பாரத் செய்திகளுக்காக தேனியில் இருந்து சுப.பழனிக்குமார்.

Last Updated : Jan 6, 2020, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.