தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. அதில், அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, உலக்குருட்டி உள்ளிட்ட மேற்குத்தொடச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 113அடியாக உள்ளது. அணையின் மொத்தக்கொள்ளளவின் நீர்மட்டம் 126 கனஅடி, அணையின் நீர் இருப்பு 57.50 மி.கன அடியாகும். இந்நிலையில், நீர்வரத்து 33 கன அடியாக உள்ள நிலையில் பெரியகுளம் பகுதி குடிநீர் தேவைக்காக 3 கன அடிநீர் வெளியேற்றப்படுகின்றன.
இதேபோல் தொடர்ந்து மழை பெய்து வந்தால் அணையின் நீர்மட்டம், அதன் முழுக்கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஆயக்கட்டுப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : பவானி ஆற்றில் உற்சாக குளியல் போடும் நீர்க்காகங்கள்!