ETV Bharat / state

தேனியில் ஆணி பிடுங்கும் திருவிழாவை முன்னெடுத்த இளைஞர்கள் குழு..! - தேனியில் ஆணி பிடுங்கும் திருவிழா

தேனி: சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுப்பதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இளைஞர்கள் குழுவினர் திருவிழா நடத்தினர்.

tree
author img

By

Published : Nov 18, 2019, 4:19 AM IST

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் விதமாக மனிதன் எண்ணற்ற தவறுகளை செய்து வருகிறான். அதில் ஒன்று தன் சுயலாபத்திற்காக நிழல் தரும் மரங்கள் மீது ஆணிகள் அடித்து விளம்பரப் பலகைகளை மாட்டுவது. மரத்தில் ஆணி அடித்தால் மரத்திற்கு வேரிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் தடைபடுவதோடு மரத்தின் தோற்றம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் அதிகமாக பாதிப்படைகின்றது.

எனவே இதனை தடுக்க இளைஞர்கள் குழு ஒன்று களமிறங்கியுள்ளது. சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுப்பதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த இளைஞர் குழு ஆணி பிடுங்கும் திருவிழாவை நடத்தியுள்ளது.

தேனியில் தன்னார்வலர்கள் நடத்திய ஆணி பிடுங்கும் திருவிழா

நேற்று ஒரே நாளில் மட்டும் தேனி நகர் பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை இவர்கள் பிடுங்கியுள்ளனர். ஆணிகளை எடுத்த பின்பு மஞ்சள், வேப்ப எண்ணெய்யை கலந்து ஆணி எடுத்த இடத்தில் வைத்து விடுகின்றனர்.

இவ்வாறு செய்வதால் அந்த மரத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் விரைவில் சரியாகிவிடும் என அவர்கள் கூறுகின்றனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்களை ஒன்றிணைத்து இப்பணியினை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த இளைஞர் குழு மேற்கொள்கிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள மரங்களில் ஆணிகளே இல்லாத நிலையை விரைவில் உருவாக்குவதே இலக்காக வைத்துள்ள இவர்கள், இதற்கு முன்னதாக பனை நடவு - 2019 என்ற இயக்கத்தின் மூலமாக மாவட்டம் முழுவதும் 18 நீர்நிலைகளில் 40ஆயிரம் பனை விதைகளை நட்டு உள்ளனர். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் மரம் நடும் விழா

Intro: தேனியில் ஆணி பிடுங்கும் திருவிழா!!
சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுப்பதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேனியில் தன்னார்வலர்கள் குழு..!!

Body: சுற்றுச்சூழலைப் பாதிக்கும் விதமாக மனிதன் எண்ணற்ற தவறுகளை செய்து வருகிறான். அதில் ஒன்று தன் சுயலாபத்திற்காக நிழல் தரும் மரங்கள் மீது ஆணிகள் அடித்து விளம்பரப் பலகைகளை மாற்றுவது. இவ்வாறு மரத்தில் ஆணி அடித்தால் மரத்திற்கு வேரிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் தடைபதோடு மட்டுமல்லாமல் மரதத்தின் தோற்றம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும் மரம் பட்டுப் போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் அதிகமாக பாதிப்படைகின்றது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தேனியில் களமிறங்கியுள்ளனர் இளைஞர்கள் குழு.! தேனி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை ஒன்றிணைத்து ஒரு குழுவை துவங்கி ஆணி பிடுங்கும் திருவிழாவை இன்று துவங்கி உள்ளனர்.
இவர்கள் மரங்களில் ஆணி அடித்து, விளம்பரம் செய்வதை தடுக்கும் நோக்கோடு மரங்களில் ஆணி அடிக்க கூடாது என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இதுவரை மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஒரே நாளில் மட்டும் தேனி நகர் பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை பிடுங்கியுள்ளனர்.
மரங்கள் இல்லை! என்றால் மனிதர்கள் இல்லை! அப்படி இருக்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், ஏராளமானோர் விளம்பர நோக்கோடு மரங்களில் ஆணி அடித்து தங்களது விளம்பரப் பலகைகளை வைத்து விடுகின்றனர். சில சமயங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகள் நன்கு பதிந்துள்ளதால் அதனை எடுப்பதற்கு இவர்களுக்கு மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது.
ஆணிகளை எடுத்த பின்பு மஞ்சள், வேப்ப எண்ணெய்யை கலந்து ஆணி எடுத்த இடத்தில் வைத்து விடுகின்றனர். இவ்வாறு செய்வதால் இந்த இடத்தின் மூலம் மரத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் விரைவில் சரியாகிவிடும் என கூறுகின்றனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்களை ஒன்றிணைத்து இப்பணியினை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மேற்கொள்கின்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள மரங்களில் ஆணிகளே இல்லாத நிலையை விரைவில் உருவாக்குவதே இலக்காக வைத்துள்ள இவர்கள், இதற்கு முன்னதாக பனை நடவு - 2019 என்ற இயக்கத்தின் மூலமாக மாவட்டம் முழுவதும் 18 நீர்நிலைகளில் 40,000 பனை விதைகளை நட்டு உள்ளனர். தற்போது ஆணி பிடுங்கும் திருவிழாவை துவங்கியுள்ளனர். அடுத்ததாக நீர் நிலை ஒன்றில் "ஒரு அத்தி" "ஒரு அரசு" என்ற விகிதத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் அத்தி மரம்! அரச மரம்! நட முடிவு செய்துள்ளனர்.
மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion: சுற்றுச்சூழலை காப்பதற்கு களமிறங்கிய இந்த குழுவை முன்னுதாரணமாகக் கொண்டு அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முனைப்புடன் செயல்பட்டாலே போதும் இயற்கை வளம் பெருகும்!

பேட்டி : 1) செந்தில் - தன்னார்வலர், தேனி.
2) பரிதி இளம் வழுதி - தன்னார்வலர், தேனி.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.