ETV Bharat / state

பட்டுப்புழுக்களைத் தாக்கும் ஊசி ஈக்களால் விவசாயிகள் அச்சம்! - ஒட்டுண்ணி ஈ

தேனி: பத்து வருடங்களுக்கு பிறகு பட்டுப்புழுக்களை தாக்கி வரும் ஊசி ஈக்களால், பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

silkworm-affected-parasitic-diease
author img

By

Published : Nov 21, 2019, 1:44 AM IST

விவசாயத்தை பிரதானமாக கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக பட்டு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பெருமாள் கவுண்டன்பட்டி, பள்ளபட்டி, கொடுவிலார்பட்டி, போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாதம்தோறும் வருமானம் தரக்கூடிய குறுகியகால தொழிலாகத் திகழ்வதால் பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பட்டுப்புழுக்களைத் தாக்கும் ஊசி ஈக்கள்

மெல்பெரி தாவரத்தை மட்டும் உண்டு, முட்டை பொறித்த எட்டாவது நாளில் இருந்து 23 நாட்கள் வரை மட்டுமே வளரக்கூடிய பட்டுப்புழு கூடாக சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. " ஒரு செடி" "ஒரு புழு" "ஒரு கூடு" என்ற ஒற்றைப் ஃபார்முலாவில் வளர்க்கப்பட்டு குறுகிய காலத்தில் வருமானம் ஈட்டி விவசாயிகளின் நண்பனாக திகழ்கிறது பட்டுப்புழு வளர்ப்பு. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு ஊசி ஈ தாக்குதலால் பட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பட்டுப்புழு கூடு கட்டுவதற்கு 5 நாட்கள் இருக்கும் நிலையில் புழுக்களை ஊசி ஈக்கள் தாக்குகின்றன. அப்படித் தாக்கும்போது புழுக்களின் உடலில் முட்டையிடும். அந்த முட்டைகள் பட்டுப்புழு கூடு கட்டும் நேரத்தில் ஆயிரக்கணக்கான ஊசி ஈக்களாக வெளியே வருகிறது. இதனால் பட்டுப்புழு கூடு கட்டாமலேயே இறந்துவிடும் என விவசாயிகள் கூறுகின்றனர் .

இதுகுறித்து பள்ளபட்டியை சேர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயி சீனிராஜ் கூறுகையில், 20 வருடங்களாக பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளேன். பட்டுப்புழு வளர்ப்பு என்பது ஒவ்வொரு நிலையிலும் கவனமாக வளர்க்க வேண்டும். சமீபத்தில் பட்டுப்புழுக்களை ஊசி ஈக்கள் தாக்குவது அதிகரித்துள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு பிறகு வந்துள்ள ஊசி ஈக்களால் பட்டுப்புழு வளர்ப்பு பாதிக்கப்படுகிறது. சென்ற முறை நான் வளர்க்கப்பட்ட 75 முட்டையில் 80 கிலோ பட்டு எடுக்கப்பட்டு விலை கிலோவிற்கு ரூ. 400 வரை கிடைத்தது. இதன் காரணமாக நல்ல லாபம் கிட்டியது. ஆனால் இந்த வளர்ப்பில் ஊசி ஈ தாக்குதலால் பட்டுக்கூடு குறைவாகவே இருக்கும் சூழலில் உள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்.

விவசாயி சீனிராஜ்

இந்த ஊசி ஈக்களின் தொடர் தாக்குதலை சமாளிக்க பட்டு வளர்ச்சித்துறையில் இருந்து 'நிஷோலினஸ் தைமாஸ்' என்கிற ஒட்டுண்ணி கொடுக்கிறார்கள். இதனால் ஊசி ஈ தாக்குதல் சற்று குறைந்து வருகிறது. ஆனால் இந்த தைமாஸ் ஒட்டுண்ணி விவசாயிகளுக்கு விரைவில் கிடைப்பதில்லை. பட்டுவளர்ச்சி அலுவலர்களிடம் பாதிப்புக் குறித்து தெரிவிக்கப்பட்டு, அவர்களின் களஆய்வுக்குப் பிறகுதான் சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

கால தாமதத்திற்குப் பின் ஒட்டுண்ணி கிடைப்பதால் பட்டுக்கூடுகள் பெரும்பான்மை அழிந்து விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றன. எனவே இளம்புழு வளர்ப்பு பருவத்திலேயே தைமஸ் ஒட்டுண்ணியை விவசாயிகளுக்கு வழங்கினால் ஊசி ஈ தாக்குதலில் இருந்து விடுபடலாம். இதுதொடர்பாக பட்டு வளர்ச்சித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பட்டு வளர்ச்சித் துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, தைமாஸ் என்பது ஒரு வகையான ஒட்டுண்ணி ஈ. பட்டுப்புழுக்களை தாக்கும் பூச்சிகள் அதன் முட்டைகளை பட்டுப் புழுவின் உடலில் செலுத்திவிடும். அப்படி செலுத்தப்பட்ட முட்டைகள் இரண்டு, மூன்று நாட்களில் பொறித்து புழுவின் உடலைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும். இந்தத் தாக்குதலை கட்டுப்படுத்த தைமஸ் என்கிற ஒட்டுண்ணி ஈக்களை பட்டுப்புழு வளர்க்கும் இடங்களில் வைக்க வேண்டும். அவை ஊசி ஈக்கள் முட்டையிட்ட புழுவை தேடிச் சென்று அவற்றின் முட்டைகளை அழிக்கும். இதனால் பட்டுப்புழு பாதிக்கப்படாது. சரியான நேரத்தில் கூடுகட்டும். விவசாயிகளும் பாதிக்கப்பட மாட்டார்கள். போதியளவு தைமாஸ் கொண்டுவரப்பட்டு அனைத்து பட்டுப்புழு வளர்ப்போருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஊசி ஈக்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்களே வாருங்கள் - செங்கோட்டையன்

Intro: பட்டுப்புழுக்களை தாக்கும் ஊசி ஈ.!
பத்து வருடங்களுக்கு பிறகு பட்டுப்புழுக்களை தாக்கி வரும் ஊசி ஈக்களால், தேனி மாவட்ட பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Body: விவசாயத்தை பிரதானமாக கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக பட்டு வளர்ப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் விவசாயிகள். தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பெருமாள் கவுண்டன்பட்டி, பள்ளபட்டி, கொடுவிலார்பட்டி, போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாதம் மாதம் வருமானம் தரக்கூடிய குறுகியகால தொழிலாகத் திகழ்வதால் பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மெல்பெரி தாவரத்தை மட்டும் உண்டு, முட்டை பொறித்த எட்டாவது நாளில் இருந்து 23 நாட்கள் வரை மட்டுமே வளரக்கூடிய பட்டுப்புழு கூடாக சந்தைக்கு அனுப்பப்படுகின்றன.
" ஒரு செடி" "ஒரு புழு" "ஒரு கூடு" என்ற ஒற்றைப் ஃபார்முலாவில் வளர்க்கப்பட்டு குறுகிய காலத்தில் வருமானம் ஈட்டி விவசாயிகளின் நண்பனாக திகழ்கிறது பட்டுப்புழு வளர்ப்பு. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு ஊசி ஈ தாக்குதலால் பட்டு உற்பத்தி பாதிக்கப் படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பட்டுப்புழு கூடு கட்டுவதற்கு 5 நாட்கள் இருக்கும் நிலையில் புழுக்களை ஊசி ஈக்கள் தாக்குகின்றன. அப்படித் தாக்கும்போது புழுக்களின் உடலில் முட்டையிடும். அந்த முட்டைகள் பட்டுப்புழு கூடு கட்டும் நேரத்தில் ஆயிரக்கணக்கான ஊசி ஈக்களாக வெளியே வருகிறது. இதனால் பட்டுப்புழு கூடு கட்டாமலேயே இறந்து விடும் எனக் கூறுகின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து பள்ளபட்டியை சேர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயி சீனிராஜ் கூறுகையில், 20 வருடங்களாக பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளேன். பட்டுப்புழு வளர்ப்பு என்பது குழந்தையை வளர்ப்பது போல, ஒவ்வொரு நிலையிலும் கவனமாக வளர்க்க வேண்டும். கூடுகட்டும் வரை பாதுகாக்க வேண்டும். சமீபத்தில் பட்டுப் புழுக்களை ஊசி ஈக்கள் தாக்குவது அதிகரித்துள்ளது.
கடந்த பத்து வருடங்களுக்கு பிறகு வந்துள்ள ஊசி ஈக்களினால் பட்டுப்புழு வளர்ப்பு பாதிக்கப்படுகிறது. சென்ற முறை நான் வளர்க்கப்பட்ட 75 முட்டையில் 80 கிலோ பட்டு எடுக்கப்பட்டு விலை கிலோவிற்கு ரூபாய் 400 வரை கிடைத்தது. இதன் காரணமாக நல்ல லாபம் கிட்டியது. ஆனால் இந்த வளர்ப்பில் ஊசி ஈ தாக்குதலால் பட்டுக்கூடு குறைவாகவே இருக்கும் சூழலில் உள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்.
இந்த ஊசி ஈக்களின் தொடர் தாக்குதலை சமாளிக்க பட்டு வளர்ச்சித்துறையில் இருந்து 'நிஷோலினஸ் தைமாஸ்' என்கிற ஒட்டுண்ணி கொடுக்கிறார்கள். இதனால் ஊசி ஈ தாக்குதல் சற்று குறைந்து வருகிறது. ஆனால் இந்த தைமாஸ் ஒட்டுண்ணி விவசாயிகளுக்கு விரைவில் கிடைப்பதில்லை. பட்டுவளர்ச்சி அதிகாரிகளிடம் பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டு, அவர்களின் களஆய்வுக்குப் பிறகுதான் சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப் படுகின்றன.
கால தாமதத்திற்குப் பின் ஒட்டுண்ணி கிடைப்பதால் பட்டுக்கூடுகள் பெரும்பான்மை அழிந்து விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றன. எனவே இளம்புழு வளர்ப்பு பருவத்திலேயே தைமஸ் ஒட்டுண்ணியை விவசாயிகளுக்கு வழங்கினால் ஊசி ஈ தாக்குதலிலிருந்து விடுபடலாம். இதுதொடர்பாக பட்டு வளர்ச்சித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பட்டு வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தைமாஸ் என்பது ஒரு வகையான ஒட்டுண்ணி ஈ. பட்டுப்புழுக்களை தாக்கும் பூச்சிகள் அதன் முட்டைகளை பட்டுப் புழுவின் உடலில் செலுத்தி விடும். அப்படி செலுத்தப்பட்ட முட்டைகள் இரண்டு, மூன்று நாட்களில் பொறித்து புழுவின் உடலைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும். இந்த தாக்குதலை கட்டுப்படுத்த தைமஸ் என்கிற ஒட்டுண்ணி ஈக்களை பட்டுப்புழு வளர்க்கும் இடங்களில் வைக்க வேண்டும். அவை ஊசி ஈக்கள் முட்டையிட்ட புழுவை தேடிச் சென்று அவற்றின் முட்டைகளை அழிக்கும். இதனால் பட்டுப்புழு பாதிக்கப்படாது. சரியான நேரத்தில் கூடுகட்டும். விவசாயிகளும் பாதிக்கப்பட மாட்டார்கள். போதியளவு தைமாஸ் கொண்டுவரப்பட்டு அனைத்து பட்டுப்புழு வளர்ப்போருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஊசிகள் கட்டுப் படுத்தப் பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Conclusion: பேட்டி : சீனிராஜ் ( பட்டுப்புழு வளர்ப்பு விவசாயி - பள்ளபட்டி)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.