ETV Bharat / state

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிணம் போல வேடமணிந்து நூதன போராட்டம்! - dyfi students protest against neet

தேனி: நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிணம் போல் வேடமணிந்தும், கழுத்தில் தூக்கு கயிறை மாட்டியவாறு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட்
நீட்
author img

By

Published : Sep 14, 2020, 5:31 PM IST

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தேனியில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து பிணம் போன்று வேடமணிந்து, கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியவாறு நூதன முறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி - மதுரை சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினார்.

ஆனால் காவல் துறையினரின் தடுப்பையும் மீறி போராட்டக்காரர்கள் வந்ததால் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

பின்னர் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில், மாணவர்களின் மருத்துவர் கனவை நீர்த்து போகச் செய்யும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பிணம் போல வேடமணிந்து நூதன போராட்டம்

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பத்திற்கு அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் வருத்தம் தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் இன்றைய சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் திமுக உறுப்பினர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அச்சிடப்பட்ட முகக்கவசம் அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:நீட் தற்கொலை; நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு சரமாரி கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.