தேனியைச் சேர்ந்த 41 வயதுடைய சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தள்ளுவண்டியில் பழக்கடை நடத்திவருகிறார். இவருக்கு 15 வயதில் பள்ளி படிக்கும் மகள் ஒருவரும் உள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சுரேஷ் குடிபழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று இரவும் மது போதையில் வந்த அவர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகளிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனைக் கண்ட அவரது மனைவி அவரைத் தடுத்துள்ளார்.
பின்னர் அவர் மீது அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த காவல் துறையினர், சுரேஷ் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், பெற்ற மகளிடமே, பாலியல் சீண்டல் செய்த தந்தை கைதுசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!