ETV Bharat / state

'நரிக்குறவர் பட்டியலில் திராவிட கட்சிகளை சேர்க்க வேண்டும்!' - seeman

தேனி: தாய்மொழி இல்லாத நரிக்குறவர் பட்டியலில் திராவிட கட்சியினரை சேர்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

seeman
author img

By

Published : Aug 10, 2019, 9:50 AM IST

தேனி மாவட்டத்தில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு வனவேங்கைகள் கட்சி சார்பில் பழங்குடிகள் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கல் தோன்றி, மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி குறவர் இனம். இதனை நரிக்குறவர் இனத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு எனக் குறிப்பிட்டார். மகாராஷ்டிராவிலிருந்து வந்த சரபோஜி மன்னருடன் வந்தவர்கள்தான் தற்போதைய நரிக்குறவர் இனத்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

ஊசி, பாசி மணி விற்பவர்களை, பூனை, நரி பிடித்துக் கொண்டு இருந்தவர்களை நரிக்குறவர் என்ற பட்டியலில் இணைத்து நாசம் செய்தது திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகள்தான் என கடுமையாக தாக்கிப் பேசினார். இவர்களையும் (திராவிட கட்சிகள்) அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

குடிபோதையில் சீமானுக்கு முத்தம் தரவந்த இளைஞரால் சலசலப்பு

இதனிடையே கூட்டத்தில் சீமான் பேசிக்கொண்டிருக்கையில், மேடை ஏறிய இளைஞர் ஒருவர் தனது கைகளால் சீமானின் முகத்தை பிடித்து முத்தம் கொடுக்க முயற்சித்தார். அதற்குள் சுதாரித்துக்கொண்ட சீமான் சற்று விலகிச் சென்று, குடித்துவிட்டு வருகிறான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று மேடையில் நின்றிருந்தவர்களை கடிந்துகொண்டார்.

அந்த இளைஞரை மேடையை விட்டு அழைத்துச் சென்ற பிறகு, 'அவர் நம் தம்பிதான்; அவராக வரவில்லை. அவருக்குள் இருக்கும் கரண்டுதான் வந்திருக்கிறது' என சீமான் நகைச்சுவையாக பேசியது அங்கிருந்தவர்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியது.

Intro: தாய்மொழி இல்லாத நரிக்குறவர் பட்டியலில் திராவிட கட்சியினரை சேர்க்க வேண்டும். தேனியில் நடைபெற்ற பழங்குடி எழுச்சி மாநாட்டில் சீமான் பேச்சு.

Body: தேனி மாவட்டம் தேனியில் வனவேங்கைகள் கட்சி சார்பில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பழங்குடிகள் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அவர், நாம் எல்லாம் கருப்பு, வெள்ளை சட்டை அணிந்த அடிமைகள். இருந்தாலும் மனதில் தோன்றிய எதையாவது பேசி வருகிறோம். ஆனால் காக்கி உடை அணிந்த அடிமைகளான காவல்துறையினர் இந்த உலகத்திலேயே பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களை காப்பாற்றுவதற்காவது நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும்.
கொழுக்கட்டை போல மீசையின்றி, முகம் முழுவதும் மழிக்கப்பட்டு,ஊன்றுகோல் போல கையில் வேல் வைத்து கொண்டிருந்த முருகனை தான் நீண்ட காலமாக மக்கள் வணங்கி வந்தார்கள். ஆனால் சிக்ஸ் உடம்புடன், முறுக்கு மீசை தோற்றத்துடன் கருப்பு நிறத்தில் முருகனை வரைந்து நாம் வழிபட்டு வருகிறோம். மேலும் தெய்வத்தின் நிறம் கருப்பு, பிசாசின் நிறம் வெள்ளை. அதனால் தான் சினிமாவில் ஆவிகள் எல்லாம் வெள்ளை நிறத்தில் காட்டுகிறார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கல் தோன்றி, மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி குறவர் இனம். இதனை நரிக்குறவர் இனத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. மராட்டியத்தில் இருந்து வந்த சரபோஜி மன்னருடன் வந்தவர்கள் தான் தற்போதைய நரிக்குறவர் இனத்தவர்கள்.
அவர்களை குருவிக்காரன், வாக்கிரி போலி, அக்கி பிக்கி என்றுதான் அழைக்கப்படவேண்டும்.
இவர்களை தமிழர்கள் என்று சொல்வது தவறு. நரிக்குறவர் இனத்தவர்களுக்கு தாய் மொழி கிடையாது. புரியாத ஏதோ ஒரு மொழியில் பேசிக் கொள்கிறார்கள். அவர்களின் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. பேச்சு மொழியாக ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஊசி, பாசி மணி விற்பவர்களை, பூனை, நரி பிடித்துக் கொண்டு இருந்தவர்களை நரிக்குறவர் என்ற பட்டியலில் இணைத்து நாசம் செய்தது திமுக அதிமுக ஆகிய திராவிட கட்சிகள்தான். இவர்களையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது என்றார்.
மேலும் உலகம் முழுவதும் வென்று வந்த அருள்மொழிச் சோழன் தனது நினைவிடத்தில் லிங்கம் போல தலை கவிழ்ந்து கிடந்தார். அங்கிருந்த பூசாரி கருணாநிதியிடம் சொல்லி, நினைவிடத்திற்கு மேற்கூரை அமைத்து மண்டபம் கட்ட வேண்டும் என்றார். அதற்கு ஆயிரம் ஆண்டுகள் பொறுத்திருந்த சோழன் இன்னும் ஒரு 5 - 10 ஆண்டுகள் காத்திருக்கட்டும்.
நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் அருள்மொழிச் சோழனுக்கு மணி மண்டபம் கட்டப்படும், மேலும் ஓரே இரவில் பலரது சிலைகளை குட்டிச்சாக்கில் கட்டிக்கொண்டு கடலில் போட்டுவிடப்படும் என்று பேசினார்.

Conclusion: இதனிடையே கூட்டத்தில் சீமான் பேசிக்கொண்டிருக்கையில், மேடை ஏறிய இளைஞர் ஒருவர் தனது கைகளால் சீமானின் முகத்தை பிடித்து முத்தம் கொடுக்க முயற்சித்தார். அதற்குள் சுதாரித்தவர், சற்று விலகி சென்று, குடித்து விட்டு வருகிறான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று மேடையில் நின்றிருந்தவர்களை கடிந்து கொண்டார்.
பின்னர் அந்த இளைஞரை மேடையை விட்டு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு சுதாரித்து பேசத்தொடங்கிய சீமான், அவர் நம் தம்பி தான். அவர், அவராக வரவில்லை. அவருக்குள் இருக்கும் கரண்டு தான் வந்திருக்கிறது என்றார்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.