ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மீட்பு

தேனி: போடியில் புறா பிடிக்கும் போது 50 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் விழுந்த பள்ளி மாணவனை, 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

author img

By

Published : Jul 24, 2019, 7:13 PM IST

பள்ளி மாணவன்

தேனி மாவட்டம் போடி மேலச்சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த செல்வமணியின் மகன் கார்த்திகேயன்(14). இவர் அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து அரசு பொறியியல் கல்லூரியின் பின்புறம் உள்ள, தண்ணீர் இல்லாத 50 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் இறங்கி புறா பிடிக்க சென்றனர்.

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மீட்பு!

அப்போது, எதிர்பாரத விதமாக கார்த்திகேயன் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அதன்பின் அருகே இருந்த அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு கார்த்திகேயனை உயிருடன் மீட்டனர். அவருக்கு, காலில் காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Intro: தேனி மாவட்டம் போடியில் புறா பிடிக்கும் போது 50 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் விழுந்த பள்ளி மாணவன். 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்.
Body: தேனி மாவட்;டம் போடி மேலச்சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவரது மகன் கார்த்திகேயன் (14) இவர் அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது பள்ளி நண்பர்களான விஷ்ணுதாஸ் மற்றும் பாலு ஆகியோருடன் போடி அரசு பொறியியல் கல்லூரிக்கு பின்புறம் உள்ள தண்ணீர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றிற்குள் புறா பிடிப்பதற்கு திட்டம் தீட்டி உள்ளே இறங்கியுள்ளனர்.
புறா பிடிக்கும் போது கார்த்திகேயன் தவறி கிணற்றுக்குள் விழுந்து விடவே உடன் இருந்த நண்பர்கள் என்ன செய்வது என்பது தெரியாமல், அருகே இருந்த அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இருந்த சிறுவனை கயிறு மற்றும் ஏணியின் உதவியுடன் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
தண்ணீர் இல்லாத கிணற்றினுள் விழுந்ததால் சிறுவனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது, உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளிக்கப்பட்டு, போடி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

Conclusion: புறா பிடிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.