ETV Bharat / state

'அது நானில்லைங்க': சசிகலாவிற்கு ஆதரவு சுவரொட்டிக்கு மறுப்பு சுவரொட்டி! - Sasikala Against Poster in Aundipatti

தேனி: ஆண்டிபட்டியில் சசிகலா ஆதரவு ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு, 12 நாள்களுக்குப் பிறகு மறுப்பு தெரிவித்து அதிமுக பிரமுகர் வேல்முருகன் சுவரொட்டி ஒட்டியள்ளார்.

sasikala poster
sasikala poster
author img

By

Published : Feb 20, 2021, 4:39 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை முடிந்து விடுதலையான சசிகலாவினை வரவேற்கும் விதமாக தமிழ்நாட்டில் அமமுகவினர் ஆங்காங்கே ஆதரவு சுவரொட்டிகள் ஒட்டினர். இவர்களுடன் அதிமுகவிலும் சிலர் சசிகலாவிற்காக சுவரொட்டிகள் ஒட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஆண்டிபட்டி
சசிகலாவிற்கு ஆதரவாக ஒட்டிய சுவரொட்டி

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது புகைப்படம், பெயர் விவரங்களுடன் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சசிகலாவை ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதிமுக கிளை செயலாளராகவும், அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்து வரும், இவரது பெயர், புகைப்படத்துடன் கூடிய அந்த சுவரொட்டியில், “தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்.. அஇஅதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் சின்னம்மா“ என சசிகலா புகைப்படத்துடன், ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரது படங்களையும் அச்சிட்டு ஆண்டிபட்டி நகர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர்.

சிகலா ஆதரவு சுவரொட்டிக்கு மறுப்பு தெரிவித்து அதிமுக பிரமுகர் வேல்முருகன் சுவரொட்டி

இந்த சம்பவம் நடந்து 12 நாள்கள் கடந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சுவரொட்டியை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் வேல்முருகன். அதில் கடந்த 10 நாள்களுக்கு முன்பாக எனக்கு தெரியாமல் எனது பெயரை பயன்படுத்தி சசிகலாவை கழத்தின் பொதுச்செயாலாளராக பதவி ஏற்க வருமாறு போஸ்டர் அச்சடித்து ஒட்டியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி நகரில் சில இடங்களில் மட்டுமே ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சில நிமிடங்களிலேயே கிழிக்கப்பட்டன.

புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதுவரை காவல் துறையினரிடம் புகார் அளிக்காத வேல்முருகனின் செயலால், 'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' என்ற கவுண்டமனியின் நகைச்சுவை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இதையும் படிங்க: 'தியாகத்தின் மறு உருவம் ராஜமாதாவே வருக வருக!' - சசிகலாவை வரவேற்று ஆண்டிபட்டியில் அதிமுக நிர்வாகி போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.