ETV Bharat / state

தேனியில் சந்தன கடத்தல்...! - அதிநவீன கருவிகளுடன் அட்டகாசம் செய்யும் கும்பல் - தேனி மாவட்டம்

தனியார் நிலத்தில் வளர்க்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான சந்தன மரங்கள் வெட்டி திருடப்பட்டுள்ளதாக நில உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

தேனியில் சந்தன கடத்தல்..! - அதிநவீன கருவிகளுடன் அட்டகாசம் செய்யும் கும்பல்

author img

By

Published : Jul 8, 2022, 8:44 PM IST

Updated : Jul 9, 2022, 8:13 AM IST

தேனி: மரங்களிலே மிக விலை உயர்ந்த மரங்களில் ஒன்றாக கருதபடுவது சந்தன மரம் ஆகும், அதாவது ஆப்பீள் பிளாக் வுட் மரத்திற்கு பிறகு அதிக விலையுள்ள மரமாக பார்க்கபடுவது இந்த சந்தன மரங்கள் ஆகும்.

உயர்தர வாசனை திரவியங்கள் தயாரிக்கவும், வாசனை ஆயில்கள் தயாரிக்கவும் சந்தன மரங்கள் பயன்படுகின்றது. இதன் மதிப்பு மிக அதிகம் என்பதாலும், சந்தன மரங்களுக்கு சந்தைகளில் பெரும் வரவேற்பு இருப்பதாலும், அதிகளவில் சந்தன மரங்கள் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கபட்டு வருகின்றன.

இதே காரணங்களினால் சந்தன மரங்களை குறி வைத்து கடத்துவது தொடர் கதையாகி வருகிறது. கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சந்தன மரங்கள் எங்கெங்கு வளர்க்கபடுகிறது, அதன் வயது, இடம் , அது கண்காணிப்பில் உள்ளதா? என்பதை எல்லாம் நோட்டமிட்டு இயந்திரங்களின் உதவியுடன் சில நிமிடங்களில் மரங்களை வெட்டி கடத்தி சென்று விடுகின்றனர்.

இந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பலின் பார்வை சமீபகாலமாக தேனி மாவட்டம் பக்கம் திரும்பியுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஒரு சில மரங்களை மட்டும் வெட்டி கடத்தி வந்த கும்பலின் பார்வை சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினரின் அலுவலகத்திலேயே கை வைக்கும் அளவிற்கு சென்றுள்ளது.

ஆண்டிபட்டி மற்றும் வருசநாடு பகுதியில் உள்ள வனத்துறையினரின் அலுவலகத்தில் இருந்த சந்தன மரங்களையே அந்த கும்பல் இரவோடு இரவாக வெட்டி கடத்தி சென்றுள்ளது. இந்த நிலையில் இந்த கும்பலின் கைவரிசை மீண்டும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் வளர்க்கபடும் சந்தன மரங்களின் பக்கம் தற்போது திரும்பியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள தனசேகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கபட்டு வந்த 80க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை மர்ம கும்பல் ஆள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி வெட்டி கடத்தியுள்ளது.

தேனியில் சந்தன கடத்தல்..! - அதிநவீன கருவிகளுடன் அட்டகாசம் செய்யும் கும்பல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கோம்பை பகுதியில் விவசாயம் செய்து வருபவர் தனசேகரன். இவருடைய நிலத்தின் வரப்பு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இதோடு அந்த நிலத்தின் அருகாமையில் உள்ள மற்றொரு நபரின் நிலத்தின் முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனசேகரன் டெல்லியில் மத்திய அரசு பணியில் உள்ள மகளைப் பார்க்கச் சென்று விட்டு 20 நாட்கள் கழித்து வந்து பார்த்த பொழுது அவருடைய பட்டா நிலத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான 6 சந்தன மரங்கள் மற்றும் இரண்டு தேக்கு மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் சம்பவம் குறித்து தேனி வனச்சரக அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளும் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்ற நிலையில் கடந்த ஒரு மாத காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இவருடைய பக்கத்து நிலத்தில் இருந்த சந்தன மரங்களில் 80க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து நில உரிமையாளர் தனசேகரன் கூறுகையில்: பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரம் மற்றும் தேக்கு மரங்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்டம் வன அலுவலர், வருவாய் துறை அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்பு மரங்கள் வெட்டப்படும். ஆனால், அனுமதி இல்லாமல் 15 முதல் 20 ஆண்டுகள் வளர்க்கப்பட்ட சந்தன மரங்கள் வெட்டப்படுகின்றன.

தற்போது வெட்டப்பட்டுள்ள சந்தன மரங்கள் மற்றும் தேக்கு மரங்களை 25 ஆண்டுகள் கழித்து வெட்டினால் அதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செல்லும் நிலையில் 70% வளர்ச்சி அடைந்துள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாகவும், வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயி தனசேகரன் குற்றம் சாட்டுகிறார்.

இது குறித்து தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தாவிடம் கேட்ட போது தற்போது தான் புதியதாக தேனி மாவட்ட வன அலுவலராக பதவியேற்றுள்ளதாகவும், இந்த சம்பவம் பற்றி விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் நெட்வெர்க் உள்ள இந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை வனத்துறையினரோடு இணைந்து காவல்துறையும் இந்த சம்பவங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதையும் படிங்க:நீலகிரியில் தொடர் மழை : மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!

Last Updated : Jul 9, 2022, 8:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.