தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் தேவாரம் பகுதியில் உள்ள ஏலக்காய் கமிஷன் மண்டியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ஆறாவது மைல் பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட 204 ஏலக்காய் மூட்டைகளை லாரியில் நேற்று முன்தினம் (ஜன.03) தேவாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
வாகனத்தை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கொச்சாரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுஜித் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது கம்பம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் டீ குடிப்பதற்காக வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவாரத்தில் உள்ள கமிஷன் கடையில் ஏலக்காய் மூட்டைகளை இறக்கும்போது அதில் தலா 25 கிலோ எடையுள்ள மூன்று ஏலக்காய் மூடைகள் திருடு போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், தேவாரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு, லாரி ஓட்டுநர் சுஜித்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் கம்பம் மெட்டு சோதனைச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.60,800 பறிமுதல்- 3 பேரிடம் விசாரணை